இளைஞர்கள், பெண்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் பெருமிதம்

இளைஞர்கள், பெண்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பரபரப்பான அரசியல் மற்றும் நோய் பரவல் சூழ்நிலைகளுக்கு இடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். . இளைஞர்கள், பெண்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Recommended Video

    Union Budget 2022 : யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

    நாடாளுமன்றத்தில் இன்று 2022- 2023 மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இளைஞர்கள், பெண்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளதார வளர்ச்சிப்பாதையை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தடுப்பூசி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதால் பொருளாதாரம் வளர்ச்சியடைய உதவியதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    இளைஞர்கள் தொழில் தொடங்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலாசீதாராமன் தெரிவித்தார். போக்குவரத்து வசதிகளுக்கும் உள் கட்டமைப்பு வசதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் நிர்மலா சீதாராமன் .

    கதி சக்தி திட்டத்தின் மூலம் நாட்டின் உள் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும் என்று கூறினார். நாட்டின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றமடையச் செய்யும். வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கப்படும். விநியோகத்துக்கான நேரம் குறைவதுடன், சரக்குகளை கையாள்வதற்கான செலவும் குறையும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    தரமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை. இப்போது அதை முழுமையான முறையில் உருவாக்க அரசு தீர்மானித்துள்ளது. அதற்காகவே இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    நாடு முழுவதும் 400 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்படும். இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும்.
    25000 கிமீ தூரத்திற்கு நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    கோதாவரி, காவிரி பெண்ணாறு இணைப்பு உள்ளிட்ட 5 நதிகளை இணைக்கும் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    பட்ஜெட் எதிர்பார்ப்புகள்

    பட்ஜெட் எதிர்பார்ப்புகள்

    நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையையும் பெறுகிறார். பட்ஜெட் 2022 பற்றி தொழில்துதுறையினர் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளன. மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் முதல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை மத்திய பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    கவர்ச்சிகர அறிவிப்புகள்

    கவர்ச்சிகர அறிவிப்புகள்

    உத்தரபிரதேச மாநிலம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளதால் மத்திய பட்ஜெட்டில் ஜனரஞ்சக அறிவிப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனரஞ்சக அறிவிப்புகளுக்கு நிதி தேவை. அதனை திரட்டுவதற்கான சூழல் தற்போது இல்லை என சில பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.பட்ஜெட்டை ஆண்டுக்கு ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சுமார் 14% அதிகரித்து ரூ. 39.6 லட்சம் கோடியாக உயர்த்த வாய்ப்புள்ளது.

    கடன் வாங்கத் திட்டம்

    கடன் வாங்கத் திட்டம்

    வரி விகிதங்களில் பெரிய மாற்றமில்லாமல் அதற்குப் பதிலாக அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை, நெருக்கடியில் உள்ள அரசு நிறுவனங்களின் சொத்து விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்ட திட்டமிடலாம் எனத் தெரிகிறது. இதுமட்டுமின்றி சுமார் ரூ. 13 லட்சம் கோடி கடன் வாங்கவும் திட்டமிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கொரோனா கால நெருக்கடி

    கொரோனா கால நெருக்கடி

    கொரோனா தொற்றுநோய் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது நிதியமைச்சரின் முன் உள்ள மிகப்பெரிய சவால். இது தவிர, வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதுடன், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பல சவால்கள் அவர் முன் உள்ளன.

    சலுகை அறிவிப்புகள்

    சலுகை அறிவிப்புகள்

    நீண்டகாலமாக இந்தியாவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படவில்லை. எனவே மத்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. அவ்வாறு வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால் அதற்கு ஏற்ப தொழில்துறையினருக்கு பண சுழற்சி கிடைப்பதில் சிக்கல் எழாமல் இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி வங்கி தவிர மற்ற முதலீடுகள் குறையும் வாய்ப்பையும் தவிர்க்க வேண்டும் என்பதற்காக சலுகைகள், சில நிதியுதவி அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவாய்ப்புண்டு.

    மூலதன ஆதாய வரி

    மூலதன ஆதாய வரி

    அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மீதான மூலதன ஆதாய வரியை ரத்து செய்வது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இந்த சூழலில் வரி குறைப்பு செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இப்படி செய்தால் 40 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு நிதி வருவதற்கு வாய்ப்பாக அமையும் என எச்எஸ்பிசி ஆய்வு தெரிவித்துள்ளது.

    வேலையின்மை

    வேலையின்மை

    கொரோனா தொற்றுக்குப் பிறகு வேலையின்மை விகிதம் வேகமாக அதிகரித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பது நிதியமைச்சரின் முன் பெரும் சவாலாக உள்ளது. இதற்காக பட்ஜெட்டில் நூறு நாள் வேலை வாய்ப்புறுதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் தொகையை அதிகரிப்பதுடன், நகர்ப்புற வேலையின்மை பிரச்சனையை தீர்க்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+