டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்க யாருனு நீங்க முடிவு பண்ணக்கூடாது! நேருக்கு நேர் கேட்ட ஜெய்சங்கர்! டெல்லியில் பரபரத்த மீட்டிங்!

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியா எப்படிப்பாட்ட நாடு என்று உலக நாடுகள் முடிவு செய்ய முடியாது என கூறியுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் , ஆப்கானிஸ்தானில் போர் நடந்த போது ஐரோப்பிய நாடுகள் எங்கே போயிருந்தன என கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    Left, Right வாங்கிய EAM Jaishankar| 110 Fighters தயாரிக்கும் India | Oneindia Tamil

    தலைநகர் டெல்லியில் ரைசினா சர்வதேச மாநாடு நடைபெற்றது. பருவநிலை மாற்றம் உக்ரைன் போர் உள்ளிட்ட ஆறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்தாண்டு இந்தியா தலைமை வகிக்க இந்த மாநாட்டில் போலந்து உள்ளிட்ட 90 நாடுகளை சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேக் இன் இந்தியா - ஹேட் இன் இந்தியா ஒன்றாக இருக்க முடியாது! பட்டியலிட்டு மோடியை விளாசும் ராகுல் மேக் இன் இந்தியா - ஹேட் இன் இந்தியா ஒன்றாக இருக்க முடியாது! பட்டியலிட்டு மோடியை விளாசும் ராகுல்

    ரைசினா மாநாடு

    ரைசினா மாநாடு

    மாநாட்டின் இறுதி நாளில் உக்ரைன் போர் போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா இருப்பதாக சில ஐரோப்பிய நாடுகள் சுட்டிக் காட்டியதோடு, உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுக்க வேண்டுமென்ற ரீதியில் பேசின. இதற்கு பதிலளித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், " கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் என்ன நடந்தது என்பது அனைவருக்குமே தெரியும்.

    மேற்கு நாடுகள் புகார்

    மேற்கு நாடுகள் புகார்

    அந்நாட்டு மக்கள் என்ன பாடுபட்டனர் என்பதை நாம் யாரும் மறக்கவில்லை. அதைப் போலத்தான் தற்போதைய உக்ரைன் நிலையும் இருக்கிறது. இது ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு அறைகூவலாக கூட இருக்கலாம். ஆசியாவில் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் நெருக்கடியை எதிர்கொண்ட போது ஐரோப்பிய நாடுகள் எங்கே போயிருந்தன?

    போர் நிறுத்தம் வேண்டும்

    போர் நிறுத்தம் வேண்டும்

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. போரை நிறுத்திவிட்டு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம். உக்ரைனில் நடந்து வரும்போரை உடனடியாக நிறுத்துவதற்கான வழிமுறைகளைதான் நாம் காண வேண்டும். போரை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் தர வேண்டும்.

    இந்தியாவின் சாரா நிலை

    இந்தியாவின் சாரா நிலை

    உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவை குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுக்கவைக்க மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுத்தன. இருப்பினும் இந்தியா இருபக்கமும் சாரா நிலையை எடுத்தது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியர்கள் யார் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். உலகை
    மகிழ்விப்பதை
    விட, நாம் யார் என்று தெரிந்துகொண்டு, நமது கொள்கை அடிப்படையில் உலகை அணுகுவது நல்லது.என பேசினார்.

    English summary
    Union Foreign Minister Jaishankar has said that the world cannot decide what kind of country India is, and questioned where the European countries had gone during the war in Afghanistan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X