வேறலெவலில் மாறப்போகும் கிழக்கு கடற்கரை சாலை.. ப்ளூ பிரிண்டோடு நிதின் கட்காரி சூப்பர் அப்டேட்
மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த ரூ.24 ஆயிரம் கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த ரூ.24 ஆயிரம் கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வைகோ மற்றும் திமுக எம்பி சண்முகம் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு இந்த பதிலை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
சென்னையில் தொடங்கும் கிழக்கு கடற்கரை சாலை கன்னியாகுமரி வரை நீள்கிறது. இந்த சாலையை அகலப்படுத்தி பொதுப்போக்குவரத்து பயன்பாட்டிற்கு மாற்றினால், மிகப்பெரிய வரவேற்பை பெறும். இந்த திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்பி சண்முகம் ஆகியோர் கேள்வி கேட்டிருந்தனர்.

திட்ட செலவு
அதாவது கிழக்கு கடற்கரை சாலையை கல்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை உரிய அமைப்புகளுடன் நான்குவழி சாலையாக அமைக்க திட்டம் உள்ளதா? என்றும், ப்படியானால் அதன் விவரங்களை வெளியிடுங்கள். அதேபோல் மல்லபுரம் முதல் கடலூர் வரையிலான நான்குவழி சாலை திட்டத்தின் முன்னேற்றங்கள் எப்படி இருக்கிறது, கிழக்கு கடற்கரை சாலைக்கான மொத்த திட்டச்செலவுகள் விவரங்களையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.

மாமல்லபுரம்
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்துறை மந்திரி நிதின் கட்காரி இதற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் பின்வருமாறு: " மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரைகிழக்கு கடற்கரை சாலை, பாலங்கள், சுரங்கங்களுடன் பிரிக்கப்பட்ட நான்கு வழியாக அமையப்போகிறது. மாமல்லபுரத்தில் இருந்து கடலூர் வரையிலான கிழக்கு கடற்கரை சாலையும் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெறபோகிது. மாமல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான இந்த கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்துவதற்கான மொத்த திட்ட மதிப்பீட்டு செலவு ரூ.24 ஆயிரத்து 435 கோடி ஆக உள்ளது.

எப்படி தயாராகும்
திட்டப்பணிகள் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள். மாமல்லபுரம் முதல் முகையூர் வரை 31 கி.மீ. தூர நான்கு வழி சாலை, முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கி.மீ. நான்கு வழி சாலை அமைக்கப்பட உள்ளது. அதேபோல் மரக்காணம் முதல் புதுச்சேரி வரை 46 கி.மீ நான்கு வழி , புதுச்சேரி முதல் பூண்டியன்குப்பம் வரை 38 கி.மீ நான்கு வழி, பூண்டியன்குப்பம் முதல் சட்டநாதபுரம் வரை 56 கி.மீ நான்கு வழி, சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை 55 கி.மீ. நான்கு வழி, நாகப்பட்டினம் முதல் ராமநாதபுரம் வழியாக தூத்துக்குடி வரை 313 கி.மீ. நான்கு வழி, தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரி வரை 125 கி.மீ. நான்கு வழி என 8 பிரிவாக பிரித்து நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது

அமைச்சர் தகவல்
இதில் மாமல்லபுரம் முதல் முகையூர் வரையிலான 31 கி.மீ. நான்கு வழியை 11-5-2024 அன்று முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 28-2-2023 வரை 2.47 சதவீத அளவே பணியில் முன்னேற்றம் நடந்திருக்கிறது முகையூர் முதல் மரக்காணம் வரையிலான 31 கி.மீ. நான்கு வழி பணிகளுக்கு 11-5-2022 அன்று பணி ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. மரக்காணம் முதல் புதுச்சேரி வரையிலான 46 கி.மீ. பணிகளுக்கு ஏலம் கோரப்பட்டு உள்ளது. புதுச்சேரி முதல் பூண்டியன்குப்பம் வரை 38 கி.மீ. பணிகளை 14-11-2023 அன்று முடிக்க திட்டமிடப்பட்டதில் 41.60 சதவீத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது" இவ்வாறு அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications