என் இந்தியா... ஹிஜாப் அணிந்த மாணவியுடன் கரம் கோர்த்த இந்து மாணவிகள்: ராகுல் பெருமிதம்
ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவியை, இந்து மாணவிகள் 4 பேர் கையை பிடித்து கல்லூரிக்கு அழைத்து சென்றனர். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.
டெல்லி: ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவியை, இந்து மாணவிகள் 4 பேர் கையை பிடித்து கல்லூரிக்கு அழைத்து சென்ற படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, என் இந்தியா...ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரும் விவகாரம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹிஜாப் அணிவதற்கு போட்டியாக இந்து மாணவிகள் காவித்துண்டு அணிந்து வரவே போராட்டங்கள் வெடித்தன. உடுப்பி மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. ஒரு கல்வி நிறுவனத்தில் தேசிய கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது.

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை. இந்த விவகாரம் மாநில உயர்நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்தவித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த சூழ்நிலையில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகளை மீண்டும் திறக்க முதல்வர் பசவராஜ் பொம்மை கடந்த 10ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பிப்ரவரி 16ஆம் தேதியன்று மாநிலம் முழுவதிலும் உள்ள பியுசி, பட்டய கல்லூரிகள், பாலிடெக்னிக், நர்சிங் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுப்பி, ஷிமோகா, மைசூர் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிறுவனங்களைச் சுற்றி 200 மீட்டர் தூரத்துக்கு கூட்டம் போடவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதேபோல கல்வி நிலையங்களுக்கு அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவிகள் சிலர் வீட்டில் இருந்து ஹிஜாப் அணிந்து கொண்டு வருகின்றனர். கல்லூரி, பள்ளி காம்பவுண்டுக்குள் வரும் போது ஹிஜாப்பை அகற்றி விடுகின்றனர். இந்த நிலையில் உடுப்பி மாகாணத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்த பியுசி மாணவிக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாமல் இருக்கும் வகையில் சில மாணவிகள் கரம் கோர்த்து அழைத்து வந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார். ஒற்றுமையுடன் கரம் கோர்த்து நிற்கிறோம் என் இந்தியா என்றும் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications