டிரம்பின் வரி மிரட்டலுக்கு அடிபணிய முடியாது.. அமெரிக்காவின் மூக்கை உடைத்த பியூஸ் கோயல்! மாறும் ரூட்
டெல்லி: அமெரிக்கா நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கான நம்முடைய ஏற்றுமதி சரியும் நிலை உருவாகி உள்ளது. இதனை நம் நாடு கடுமையாக கண்டித்துள்ள நிலையில் வர்த்தகம் சார்ந்த மிரட்டலில் யாருக்கும் அடிபணிய மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பதிலடி கொடுத்துள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு இனி கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

அதுமட்டுமின்றி நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. தற்போது 25 சதவீத வரி அமலுக்கு வந்துள்ள நிலையில் இன்னும் 18 நாட்களுக்கு பிறகு 25 சதவீத வரி அமலுக்கு வர உள்ளது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வர்த்த துறை அமைச்சர் பியூஸ் கோயல்
டிரம்பின் வரி விதிப்பை நம் நாடு கடுமையாக கண்டித்துள்ளது. அதுமட்டுமின்றி நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் நலன் மற்றும் தேச நலனை பொறுத்து வர்த்தகங்கள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை சார்பில் டிரம்புக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டெல்லியல் பிசினஸ் டூடே இந்தியா @100 எனும் உச்சி மாநாடு நடந்தது.
இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்று வந்தார். இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையை பியூஸ் கோயல் தான் நடத்தி வந்தார். இந்நிலையில் தான் இப்போது நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்து இருப்பது மற்றும் உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் பற்றி பியூஸ் கோயலிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அடிபணிய மாட்டோம்
அதற்கு பியூஸ் கோயல், ‛‛நம் நாடு யாருக்கும் அடிபணியாது.. நம் நாட்டின் பொருளாதாரம் வலிமையாக உள்ளது. தன்னம்பிக்கையுடன் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. ஆண்டுதோறும் ஆறரை சதவீதம் என்ற அளவில் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்தியா இந்த ஆண்டு அதிக பொருட்களை ஏற்றுமதி செய்யும். வர்த்தக தடைகளை சமாளிக்க திட்டம் உள்ளது.
வர்த்தக தடைகளை எதிர்கொண்டால் அதனை சமாளிக்க ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெறும் வரிச்சலுகைகள் என்று மட்டும் இல்லாமல் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்ங்களும் உள்ளன. 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் மற்றும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக நாம் இருக்கிறது.
இளைஞர்கள் மீது நம்பிக்கை
நம்மிடம் ஏராளமான இளைஞர்கள் உள்ளன. அதேநேரத்தில் மற்ற நாடுகளிடம் வயதான மக்கள் அதிகம் உள்ளனர். மேலும் EFTA (European Free Trade Association - ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டீன், நார்வே மற்றும் ஸ்வீட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம்) நாடுகள் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டன. இதன் மூலம் 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும் மொத்தம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும். அக்டோபர் 1 முதல், EFTA ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது.
ராகுல் காந்தி மீது அட்டாக்
நம் நாட்டின் பொருளாதாரம் குறித்த எதிர்கட்சி தலைவரின் (இந்தியா பொருளாதாரம் செத்துவிட்டதாக டிரம்ப் கூறியதற்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்தார்) கருத்து வெட்க்கேடானது. நான் அவரை கண்டிக்கிறேன். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் உலகிற்கு வழிகாட்டும் இந்தியா குறித்த ராகுல் காந்தியின் கருத்தை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது.
நம் நாட்டில் கரன்சி, அந்நிய செலாவணி கையிருப்பு, பங்கு சந்தைகளின் நிலவரங்கள் நன்றாக உள்ளன. பிற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிடும்போது நம் நாட்டில் பணவீக்கம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் உலகமே நம்மை வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக அங்கீகரிக்கிறது'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் டிரம்பின் பெயரை கூறாமல் அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு அடி பணியமாட்டோம் என்று பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications