காவல் நிலையத்தில்.. காக்கி சட்டையில் காதல் டூயட்.. வசமாக சிக்கிய ஏட்டம்மா, ஏட்டையா.. எங்க தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டும், ஏட்டையாவும் போட்ட ஆட்டம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் உள்ள மாடல் டவுண் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் விவேக் மாத்தூர். இவர் யூ-டியூப் சேனல் வைத்துள்ளார்.

யூ-டியூப் சேனல்

யூ-டியூப் சேனல்

அதே போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சசி. விவேக் மாத்தூர் அவ்வப்போது டான்ஸ் ஆடி, பாட்டு பாடி என அனைத்து சோலோ பெர்பாமன்ஸ்களையும் யூ-டியூப் சேனலில் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வீடியோவுக்கு அதிகளவு லைக்ஸ், கமெண்ட்ஸ்கள் வருவதை பார்த்தால் அவருக்கு ஃபுல் மீல்ஸ்' சாப்பிட்ட மாதிரி இருக்குமாம்.

ஒரே குஷிதான்

ஒரே குஷிதான்

இந்த நிலையில் காவல் நிலையத்தில் வேலை இருந்தும் வெட்டியாக இருந்த விவேக் மாத்தூர், தனது நடிப்பு திறமையை அரங்கேற்ற நினைத்தார். ''எத்தனை தடவைதான் நாம சோலோ பெர்பாமன்ஸ் பண்ண , ஏட்டம்மா சசியை அழைத்து ஆட்டம் போட்டால் என்ன?'' என நினைத்தார். இதை அவர் சசியிடம் சொல்ல, ஏட்டமாவும் கண்ணைசைக்க பிறகென்ன ஒரே குஷிதான் போங்க.

காக்கி சட்டையில் ஆட்டம்

காக்கி சட்டையில் ஆட்டம்

காக்கி சட்டையில் ஹிந்தி பாடலுக்கு இருவரும் செம ஆட்டம் போட்டனர். அங்குள்ள பெஞ்சில் அமர்ந்து ''காக்கி சட்டை போட்ட மச்சான்'' என்ற ரேஞ்சுக்கு ரொமான்ஸ் பெர்பாமன்சும் கொடுத்தனர். ஏட்டமாவுடன் ஆட்டம் போட்ட குஷியில் அதை உடனடியாக யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார் விவேக் மாத்தூர்.

அதிகாரி வடிவில் வந்த ஆப்பு

அதிகாரி வடிவில் வந்த ஆப்பு

பிறகு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ்களை எதிர்பார்த்து கொண்டிருந்த அவருக்கு அதிகாரிகள் வடிவில் ஆப்பு தேடி வந்தது. விவேக் மாத்தூர் எதிர்பார்த்தபடியே ஏட்டமா, ஏட்டையாவின் வீடியோ பட்டிதொட்டியெங்கும் வைரலாக, இதை பார்த்த உயரதிகாரிகள் ''என்னய்யா இது போலீஸ் ஸ்டேஷனா.. பிளேபாய் ஸ்டேஷனா'' என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

விளாசும் நெட்டிசன்கள்

விளாசும் நெட்டிசன்கள்

அதிகாரிகளுக்கு விளக்கம் கடிதம் கொடுக்கும் முன்பு '' உன் குத்தமா.. என் குத்தமா.. யார நானும் குத்தம் சொல்ல'' என்று கடைசி பெர்பாமன்ஸ் செய்ய முடிவெடுத்துள்ளாராம் ஏட்டையா விவேக் மாத்தூர். கடும் மன அழுத்தத்துடன் 24 மணி நேரமும் பணியில் மூழ்கி இருக்கும் பெரும்பாலான காவலர்களுக்கு டி.வி.யில் கூட டூயட் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. ஆனால் பணி நேரத்தில் காக்கி சட்டையில் காதல் கீதம் பாடிய இந்த காவலர்களை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+