வாயில் நீளமான குச்சி... இந்த நாய்க்குட்டிக்கு இருக்கற அறிவு எல்லோருக்கும் இருந்தா கொரோனாலாம் ஓடிடும்
சமூக இடைவெளிக்காக வாயில் குச்சியுடன் பார்க்கில் நடந்து செல்லும் நாய்க்குட்டியின் வீடியோ வைரலாகியுள்ளது.
டெல்லி: சமூக இடைவெளிக்காக வாயில் குச்சியுடன் பார்க்கில் நடந்து செல்லும் நாய்க்குட்டியின் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
Recommended Video
கொரோனா காலத்தில் முகக்கவசமும், சமூக இடைவெளியும் அதிமுக்கியமாகிவிட்டது. கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள அனைவரும் இதனை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த விதி மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தான் என நிரூபித்திருக்கிறது நாய்க்குட்டி ஒன்று.
வெல்கம் டு நேச்சர் என்ற பெயரில் இயங்கும் நெட்டிசன் ஒருவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், வாயில் ஒரு நீளமான குச்சியை கவ்விக்கொண்டு, நாய்க்குட்டி ஒன்று பார்க்கில் நடந்து செல்கிறது. மக்கள் அனைவரும் கூட்டமாக நின்றிருக்க, நாய் வாயில் உள்ள குச்சி அவர்களை தன்னிடம் நெருங்கவிடாமல் தற்காக்கிறது.
"இந்த நாய்க்குட்டி சமூக இடைவெளியை மிக தீவிரமாக எடுத்துக்கொண்டுவிட்டது போலும்", என குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் அந்த நெட்டிசன். இதைப்பார்த்த மற்ற நெட்டிசன்கள் அந்த நாய்க்குட்டியின் செயலை பாராட்டி வருகின்றனர்.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டமாக நிற்பதைப் பார்க்க முடிகிறது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் மக்களிடையே கூட இல்லாத போதிய விழிப்புணர்வு, இந்த நாய்க்குட்டியிடம் இருக்கிறதே என இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் வியந்து வருகின்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications