டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவேக் குமார் - இனி இவர்தான் பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளர்... என்ன அதிகாரம் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.ஐ. அதிகாரி விவேக் குமாரை மத்திய அரசு நியமனம் செய்து இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக இருந்து வந்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி சஞ்சீவ் குமார் சிங்க்ளா, இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டின் தூதராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Vivek Kumar IFS appointed as Prime ministers personal secretary

1997 ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ். அதிகாரியான சஞ்சீவ் குமார் சிங்க்ளா, இஸ்ரேல் தலைநகர் டெல் அவீவில் உள்ள இந்திய தூதரகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக அவர் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அவரது பணியிடமாற்றத்தை அடுத்து, விவேக் குமார் பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். 2004 பிரிவு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான விவேக் குமார், தற்போது பிரதமர் அலுவலக இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இந்திய கேபினட் நியமனக்குழு விவேக் குமாரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கியதை அடுத்து மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது.

Vivek Kumar IFS appointed as Prime ministers personal secretary

பிரதமரின் தனிச் செயலாளர் எனப்படுபவர் இந்திய நிர்வாகத் துறை (ஐ.ஏ.எஸ்) மற்றும் இந்திய வெளியுறவுத்துறையிலிருந்து (ஐ.எஃப்.எஸ்) தேர்வு செய்யப்படுகிறார். பிரதமருடைய தனிச்செயலாளர்தான் இந்தியாவின் மூத்த அதிகாரியாகவும், பிரதமர் அலுவலகத்தின் நிர்வாக அதிகாரத்தையும் கொண்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vivek Kumar IFS appointed as Prime minister's personal secretary : பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.ஐ. அதிகாரி விவேக் குமாரை மத்திய அரசு நியமனம் செய்து இருக்கிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X