சிறார்களை குறி வைக்கும் 3ஆம் அலை? கேம் சேஞ்சர் 'சைடஸ் கேடிலா'.. குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யுமா
டெல்லி; இந்தியாவில் நேற்று மூன்று டோஸ் சைடஸ் கேடிலா வேக்சினுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வேக்சினை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமின்றி 12 - 18 வயதான சிறார்களுக்கு அளிக்கலாம்.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையே இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மே மாதத்தில் நான்கு லட்சமாக இருந்த தினசரி வைரஸ் பாதிப்பு இப்போது குறைந்து 40 ஆயிரம் என்ற விகிதத்தில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா 3ஆம் அலை குறித்த செய்திகள் இணையத்தில் பரவ தொடங்கியுள்ளன. 3ஆம் அலையில் சிறார்கள் உள்ளிட்ட எளிதாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் வேக்சின் போடாதவர்கள் மத்தியில் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் எனச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

கொரோனா 3ஆம் அலை
அதிலும் தற்போது இந்தியாவில் குளிர் காலம் என்பதால், இந்த சூழலில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சில ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர், இந்த சூழலில் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டிலுள்ள 11 மாநிலங்களில் பள்ளிகளைத் திறக்க மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. கொரோனா பரவல் அதிகரிக்க, குறிப்பாகச் சிறார்கள் மத்தியில், இந்த முடிவு காரணமாக இருந்துவிடக்கூடும் எனச் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்,

பள்ளிகள் திறப்பு
அதேநேரம் குழந்தைகளின் வளர்ச்சியில் பள்ளிக்கல்வி என்பது மிகவும் முக்கியமானது என்பதால் பள்ளிகளைத் திறப்பது சரியான முடிவு என்றே பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். மறுபுறம் 3ஆம் அலையில் குழந்தைகள் மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால், அதைச் சமாளிக்கும் வகையில் சிறார்களுக்கான சிறப்பு கொரோனா வார்டுகள், ஐசியு வார்டுகள், ஆக்சிஜன் வசதி ஆகியவற்றையும் பல மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன.

குழந்தைகள் ஏன் அதிக ஆபத்தில் உள்ளனர்
குழந்தைகளுக்கு அதிகளவில் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என் பல்வேறு வல்லுநர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இது குறித்து வைராலஜி வல்லுநர் டாக்டர் வி ரவி கூறுகையில், "இந்த வைரஸ் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்களை அதிகம் தாக்குகிறது. தடுப்பூசி மற்றும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவது மூலம் ஒருவருக்கு நோயெதிப்பு சக்தி ஏற்படும். இதுவரை சிறார்களுக்கு வேக்சின் பணிகள் தொடங்கப்படவில்லை. அதேபோல நாட்டில் முதல் அலையில் 4 சதவீதமும் 2ஆம் அலையில் 10-15 சதவீதமும் மட்டுமே சிறார்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் 60 முதல் 80% சிறார்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளனர்" என்றார்.

அதிகம் பாதிப்பு?
முதல் அலையுடன் ஒப்பிடுகையில் 2ஆம் அலையில் வைரஸ் தொற்றால் சிறார்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால், அவை லேசான கொரோனா பாதிப்பாகவே இருந்துள்ளது. வெகு சில குழந்தைகளுக்கு மட்டுமே மருத்துவச் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. மேலும், இதுவரை நாட்டில் ஒட்டுமொத்தமாகப் பதிவான கொரோனா உயிரிழப்புகளில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே சிறார்கள் என்பது ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தியாகும். மேலும், டெல்டா உள்ளிட்ட தற்போது வரை கண்டறியப்பட்டுள்ள எந்தவொரு உருமாறிய கொரோனாவும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.

வேக்சின் சோதனை
இருப்பினும், இந்த கொரோனா வைரஸ் எப்படி நடந்துகொள்ளும் என்பதை யாராலும் கணிக்க முடிவதில்லை. இதனால், பள்ளிகள் திறக்கும் முன் சிறார்களுக்கு வேக்சின் போடும் பணிகளைத் தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சைடஸ் கேடிலா தவிர, கோவாக்சின் தடுப்பூசி சோதனையும் 2 முதல் 17 வயதான சிறார்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது. அதேபோல 6 முதல் 17 வயதான சிறார்கள் மத்தியில் அஸ்ட்ரா ஜெனிகா வேக்சின் சோதனையும் நடைபெற்று வருகிறது.

ஆய்வாளர்கள் நம்பிக்கை
இந்தச் சூழலில் தான் மருத்துவ வல்லுநர் குழு சைடஸ் கேடிலா கொரோனா வேக்சினுக்கு அனுமதி அளிக்கலாம் எனப் பரிந்துரை அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சிறார்களுக்கு அனுமதிக்கப்பட்ட முதல் வேக்சின் என்ற சிறப்பை சைடஸ் கேடிலா பெற்றுள்ளது. சில வாரங்களில் நாட்டிலுள்ள பள்ளிகள் படிப்படியாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த வேக்சின் சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சீரோ சர்வே
அதேநேரம் சமீபத்தில் நடத்தப்பட்ட சீரோ சர்வே-இல் குழந்தைகள் மத்தியில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அடுத்து வரும் அலைகளில் சிறார்கள் மத்தியில் வைரஸ் பாதிப்பு அதிகம் ஏற்படும் என உறுதியாகக் கூற முடியாது என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்திருந்தார். கொரோனா வைரஸ் ஒப்பிட்டளவில் புதியதொரு வைரஸ் என்பதால் சிறார்கள் மத்தியில் ஏற்படும் கொரோனா பாதிப்பு குறித்து உலகெங்கும் தொடர் ஆய்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

மத்திய அரசு
முன்னதாக சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது. அதில் குழந்தைகள் சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கைகழுவ வேண்டும், தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது, அப்படி வரும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சிறார்களுக்கு வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை வீடுகளில் உள்ள முதியவர்களிடம் செல்ல அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் முதியவர்கள் கொரோனாவால் எளிதாக உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications