டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செம! போக்குவரத்து டென்ஷன் இனியும் வேண்டாம்.. இந்தியாவில் வரும் ஏர் டாக்சி! இனி ஜாலியா பறந்தே போகலாம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் தலைவலியாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தீர்க்கும் வகையில் புதிய டாக்ஸி சேவை விரைவில் வருகிறது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள டிராபிக் குறித்து யாருக்கும் தனியாகச் சொல்லத் தேவையில்லை. அதிலும் பீக் ஹவர்ஸில் சில கிலோமீட்டர் செல்லவே பல பணி நேரம் கூடு ஆகிவிடும்.

டெல்லி, பெங்களூர், சென்னை நகரங்களில் தினமும் குறிப்பிட்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் நிற்கவே செலவிட வேண்டி இருக்கிறது. இதைச் சரி செய்ய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

விழுப்புரம் அருகே அண்ணாசிலை அவமதிப்பு: பாஜகவினர் 3 பேர் அதிரடி கைது விழுப்புரம் அருகே அண்ணாசிலை அவமதிப்பு: பாஜகவினர் 3 பேர் அதிரடி கைது

 டிராபிக்

டிராபிக்

டிராபிக் நிற்கும் போதும் பல சமயங்களில் நமக்கு, "பேசாம, டிராபிக் பிரச்சினை இல்லாம பறந்து போன எப்படி இருக்கும்" என்று பெரும்பாலானோருக்கு நிச்சயம் தோன்றி இருக்கும். அது கனவாகவே இருந்துவிடும் என நினைக்காதீர்கள். அது மிக விரைவில் சாத்தியமாக உள்ளது. இந்தியாவில் மிக விரைவில் அந்த பறக்கும் ஏர் டாக்ஸிகள் வர உள்ளது. இதற்காக டெல்லியைச் சேர்ந்த ஃப்ளை பிளேட் இந்தியா நிறுவனம் பிரேசிலின் ஈவ் ஏர் மொபிலிட்டி (Eve Air Mobility) நிறுவனத்துடன் கை கோர்த்து உள்ளது.

 ஏர் டாக்சிகள்

ஏர் டாக்சிகள்

இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா முழுக்க சுமார் 200 ஏர் டாக்சிகள் வர உள்ளது. இந்த ஏர் டாக்ஸிகள் செங்குத்தாகக் கிளம்பவும் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 3 மில்லியன் டாலர் மதிப்பில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி பிரேசில் நிறுவனத்தின் ஏர் டாக்ஸிக்கள் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ஆயிரம் மணி நேரம் என்ற வகையில் 2 லட்சம் மணி நேரம் பறக்க உள்ளது

 எத்தனை பேர்

எத்தனை பேர்

இந்தியாவிற்கு விரைவில் வர உள்ள இந்த ஏர் டாக்ஸியில் நான்கு பயணிகள் அமரலாம். சரக்கு போக்குவரத்திற்கும் தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த மின்சார விமானத்தின் எடை சுமார் 2.5-3 டன்னாக இருக்கும். இதில் பெரும்பாலான எடை அதன் பேட்டரிகள் உடையதாகவே இருக்கும். ஹெலிகாப்டரை போலவே டேக்-ஆஃப் செய்யும் இந்த விமானம், 100 கிமீ வரை பறக்கும் திறனைக் கொண்டு இருக்கும்.

 அடுத்த திட்டம்

அடுத்த திட்டம்

இது தொடர்பாக ஈவ் ஏர் மொபிலிட்டி தலைவர் ஆண்ட்ரே டுவார்டே ஸ்டெயின் கூறுகையில், "நகரின் மையப் பகுதியில் இருந்து ஏர்போர்ட் மற்றும் அருகே உள்ள இடங்களுக்குப் பயணிக்கப் பெங்களூருக்கு மட்டுமே 300 மின்சார விமானங்கள் தேவைப்படும். அடுத்தகட்டமாக 6 பேர் செல்லும் வகையிலான விமானங்களை உருவாக்கி வருகிறோம். அது விமானி இல்லாமல் தனியிங்கி முறையில் இயங்கும் வகையில் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

 இந்தியா

இந்தியா

இந்தியா போன்ற மிகப் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு ஏர் டாக்ஸிகளுக்கும் ஆளில்லா விமானம் மூலமான டெலிவரிகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இதே ஈவ் ஏர் மொபிலிட்டி நிறுவனத்திடம் இருந்து 4 பேர் பயணிக்கக் கூடிய சிறிய ரக மின்சார விமானத்தை வாங்க அமெரிக்காவின் யுனைட்ட் நிறுவனமும் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 எப்போது

எப்போது

இது குறித்து ப்ளை பிளேட் தலைவர் அமித் தத்தா கூறுகையில், "அடுத்த மூன்று ஆண்டுகள் ஏர் டாக்சிகள் தரையிறங்கத் தேவையான "வெர்டிபோர்ட்கள்" உருவாக்க உள்ளோம். மேலும், பாதுகாப்பான முறையில் பயணிக்க சாப்ட்வேர்களை உருவாக்கி வருகிறோம். 2026இல் ஈவ் ஏர் டாக்ஸிகள் வணிக ரீதியாக தங்கள் சேவையை ஆரம்பிக்கும். சர்வதேச அளவில் அவர்கள் சேவையைத் தொடங்கும் போதே இந்தியாவிலும் அவர்கள் சேவையைத் தொடங்குவார்கள்" என்றார்.

English summary
Very Soon India will see its own Air taxi across the nation: Air taxis will be introduced in India in upcoming years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X