குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரணையே இல்லாமல் நீண்ட நாட்கள் சிறையில் வைப்பது சரியில்லை: உச்சநீதிமன்றம்
டெல்லி: பல வருடங்களாக குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைத்தால், விசாரணை நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட 66 வயது நபர் ஒருவர் நான்கு வருடங்களாக சிறையில் இருக்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய கந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த ஜாமீன் மனுவை விசாரித்தது. 2017ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி முதல் குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் இருப்பதால் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் தனது கட்சிக்காரர் வயதில் மூத்தவராக இருந்த போதிலும் கூட ஜாமீன் வழங்குவதில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
போதை பொருள் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, குற்றம் சாட்டப்பட்ட நபர் 35 கிலோ மதிப்புள்ள கஞ்சா போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்தார் எனவே தான் கைது செய்யப்பட்டார் என்று வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி ரமணா, குறுக்கிட்டு, இப்படியே, விசாரணை நடத்தாமல் எத்தனை வருடங்கள் சிறையில் வைக்கலாம் என்பது பற்றி நீங்கள் கருத்துக் கூற முடியுமா என்று வழக்கறிஞரிடம் எதிர்கேள்வி கேட்டார்.
அதற்கு வழக்கறிஞர் 5 வருடங்கள் வரையில் அதிகபட்சமாக விசாரணை இல்லாமல் சிறையில் வைத்திருக்கலாம் என்று பதிலளித்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, எதற்காக ஐந்து வருடத்தோடு நிறுத்திவிட்டீர்கள். பத்து வருடங்கள் வேண்டுமானாலும் சிறையிலடைத்து கொள்ளுங்கள். விசாரணையே தேவை கிடையாது அல்லவா என்றார். மேலும், அவருக்கு தற்போது 66 வயது ஆகிறது. நீங்கள் உங்கள் விசாரணையை முடிப்பதற்குள் அவர் இருப்பாரோ இல்லையோ தெரியாது, உறுதியளிக்க முடியாதல்லவா, என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் 28ம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை வந்துள்ளார் அந்த நபர். ஒருவழியாக உச்ச நீதிமன்றம் இப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது குறிப்பிடதக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications