Optical Illusion: இத்தனை படங்களில் உங்களுக்கு "இந்த" படம் தெரிந்தால்.. காதல் மலராட்டி விட்டுடுவீங்க!
டெல்லி: ஒரு படத்தில் உள்ள பல படங்களில் எந்த படம் உங்களுக்கு தெரிகிறது என்பதை பாருங்கள். அதை வைத்து உங்கள் ஆளுமை திறனை தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக கைவிரல்கள், கால் விரல்கள், நெற்றி, மச்சம் உள்ளிட்டவைகளை வைத்துதான் ஒருவரது கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை விவரித்து வந்தனர். இந்த நிலையில் ஒளியை வைத்து "ஜோதிடம்" சொல்லும் வகையில் தற்போது வந்துவிட்டன.
ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்லூஷன் என்ற விஷயம் தற்போது பிரபலமாகி வருகிறது. இதை கொண்டு ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிய முடியும். அது மட்டுமல்லாமல் உங்களது ஆளுமைப் பண்மை அறிந்து கொள்ளவும் முடியும்.

காதல் வாழ்க்கை
அதே போன்று உங்கள் காதல் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் இதன் மூல்ம உணரலாம். இந்த படத்தில் முதியவரின் படம் முதலில் உங்களுக்கு தெரிந்தால் பெரிய விஷயங்களை நீங்கள் ஒரு போதும் இழக்க மாட்டீர்கள் என்பது அர்த்தம். அது போல் காதல் பிரச்சினைகளுக்கெல்லாம் துவண்டு போகவும் மாட்டீர்கள்.

குதிரை சவாரி
அது போல் குதிரையில் சவாரி செய்யும் மனிதனை நீங்கள் முதலில் கண்டீர்கள் என்றால் உங்களை யாராலும் அடக்குவது அவ்வளவு எளிதல்ல என்பது அர்த்தம். இவர்கள் தங்கள் வாழ்க்கை துணியை குறைவாக ஏமாற்றுவார்கள். கனவுகள் வந்தால் அதில் வரும் நபர்களை தேடுவதையே வாடிக்கையாக கொண்டிருப்பார்கள்.

ஆற்றங்கரையோரத்தில் பெண்
ஒரு பெண் ஆற்றின் ஓரத்தில் படுத்திருப்பதை போன்று உங்களுக்கு முதலில் தெரிந்தால் நீங்கள் விட்டுக் கொடுக்கும் குணத்தை கொண்டவர். நீங்கள் உங்களின் காதலைத் தொடர விரும்புபவராக இருப்பீர்கள். ஆனால் அது சரியாக செல்லவில்லை என்பது பற்றியும் உங்களுக்கு பிடித்தது போன்று இல்லை என்பது பற்றி கண்டு கொள்ளாதவராக இருப்பீர்கள். அந்த காதல் மலரவில்லை என்றால் அதை விட்டுவிடுவார்கள்.

ஆற்றின் மீது வளைவு
நீங்கள் முதலில் கல் வளைவை பார்த்திருந்தால், நீங்கள் சாகசத்தை விரும்புவர் என்பது அர்த்தமாகும். நீங்கள் சாகசக்காரர் என்பதால் அந்த உணர்வை உங்களிடமிருந்து பறித்து விடுவதற்காக உங்களின் உறவுகள் முயற்சிப்பார்கள். சாகச குணம்தான் துணையை தேடி கண்டுபிடிக்க முயற்சிக்கும். இந்த படத்தை பார்த்து நீங்கள் யார் என்பதை கண்டறிந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications
