எலிசபெத் மறைவால்.. கோஹினூர் வைரம் இந்தியா வசம் வருகிறதா? மத்திய அரசின் பதில் இதுதான்!
டெல்லி: இந்தியாவிடம் இருந்து கைநழுவிப்போன விலைமதிப்பற்ற சொத்தான கோஹினூர் வைரத்தை எப்படியாவது மீட்டுக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு "தீவிரமாக" இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே சமயத்தில், கோஹினூரை விட்டுத்தர மனமில்லாத பிரிட்டன், அதுதொடர்பான எந்த விவாதமும் மீண்டும் எழுந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது.
வைரத்தின் விலைக்காகவோ அதன் மதிப்புக்காகவோ இந்தியா இந்த முயற்சியில் இறங்கவில்லை. மாறாக, ஒருகாலத்தில் இந்தியாவின் அடையாளமாக கருதப்பட்ட கோஹினூர் வைரம், இன்று வேறொரு நாட்டின் அரச கிரீடத்தை அலங்கரித்து வருகிறது நமது பெருமைக்கு இழுக்கு எனக் கருதுவதால், இந்த விவகாரத்தில் இந்திய அரசு தீவிர கவனத்தை செலுத்த முடிவு செய்துள்ளது.

'வெளிச்சத்தின் சிகரம்'
உலகில் உள்ள விலைமதிக்க முடியாத வைரங்களில் முதன்மையாக விளங்குவது கோஹினூர் வைரம் ஆகும். அதேபோல, மிகப்பெரிய வைரங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. 108 காரட் எடைக்கொண்ட தூய வைரமான கோஹினூர், ஒருகாலத்தில் பரந்து விரிந்த பாரத தேசத்தின் முக்கிய அடையாளமாக கருதப்பட்டு வந்தது. பல மாமன்னர்களின் கிரீடங்களையும், அவர்களின் அரண்மனைகளையும் இந்த கோஹினூர் வைரம் அலங்கரித்து வந்துள்ளது. மற்ற வைரங்களை காட்டிலும் கோஹினூருக்கு இருக்கும் தனிச்சிறப்பு, அதன் கண்ணைப் பறிக்கும் ஒளிதான். ஒரு இருட்டான அறையில் கோஹினூர் வைரத்தை வைத்தால், அந்த அறையில் ஓரளவுக்கு வெளிச்சம் நிரம்பிவிடும். எனவே கோஹினூர் வைரம் 'வெளிச்சத்தின் சிகரம்' (Mountain of Light) என செல்லமாக அழைக்கப்படுகிறது. 108 கேரட் கொண்டது இந்த வைரம்.

கைமாறிய கோஹினூர்
பல ஆயிரம் ஆண்டுகளாக பாரத தேசத்தில் இருந்து வந்த இந்த கோஹினூர் வைரத்தை சீக்கிய மன்னர் துலீப் சிங், 1849-ம் ஆண்டு பிரிட்டன் மகாராணியாக இருந்த விக்டோரியாவுக்கு பரிசளித்தார். அவ்வளவுதான். அதன் பிறகு, அந்த வைரம் இந்தியாவுக்கு வரவே இல்லை. முதலில், பிரிட்டன் அரசக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்த வைரம், பின்னர் அந்நாட்டு ராஜ கிரீடத்தில் பொருத்தப்பட்டது. கடைசியாக, அண்மையில் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் தான், இந்த கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடத்தை அணிந்த கடைசி ராணி ஆவார்.

'விட மாட்டோம்..' - இந்தியா உறுதி
ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் உடல்நலம் குன்றி உயிரிழந்ததை அடுத்து, கோஹினூர் வைரம் குறித்து பேச்சும் உலகம் முழுவதும் தீயாக பரவியது. கோஹினூர் வைரத்தின் சிறப்புகள் மீண்டும் பேசுபொருளாக மாறின. இதற்கு முன்பே, பல ஆண்டுகளாக கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திருப்பித் தரும்படி மத்திய அரசு பிரிட்டனிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ராணியின் மறைவை தொடர்ந்து, கோஹினூர் வைரத்தை கேட்டு பிரிட்டனுக்கு இந்தியா அதிக அழுத்தத்தை தர தொடங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தாம் பக்சி கூறுகையில், "கோஹினூர் வைரத்தை மீட்க பிரிட்டன் அரசிடம் இந்தியா ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. கோஹினூர் விவகாரத்தில் பிரிட்டனிடம் இருந்து திருப்தியான பதில் வரும் வரை இந்தியா இந்த விவகாரத்தில் இருந்து பின்வாங்காது" என்றார்.

பதுங்கும் பிரிட்டன்
அதே சமயத்தில், கோஹினூர் வைரத்தை மீட்க இந்தியா முழு மூச்சாக இறங்கி இருப்பதை அறிந்த பிரிட்டன், ராஜத்தந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ராணி இரண்டாம் எலிசபெத் மரணம் அடைந்ததால் அவரது கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் நியாப்படி தற்போதைய மன்னரான சார்லஸின் மனைவிக்கே செல்ல வேண்டும். ஆனால், கோஹினூர் குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் அதை உலகின் கண்களுக்கு காட்டுவது மேலும் பிரச்சினையை அதிகரிக்கும் என பிரிட்டன் கருதுகிறது. எனவே இப்போதைக்கு சார்லஸின் மனைவிக்கு அந்த கிரீடம் வழங்கப்படாது என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications