வரிந்து கட்டி வந்த இஸ்லாமிய நாடுகள்! ஒரே பேச்சில் உலகெங்கும் கிளம்பிய புயல்! யார் இந்த நுபுர் சர்மா?
டெல்லி : தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, இஸ்லாமியர்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், நுபுர் சர்மா யார்? அவரது பின்னணி என்ன என்பது குறித்து இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகிறது.
Recommended Video
அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக பெண் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது.

சர்ச்சைப் பேச்சு
பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் இன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ''பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது. எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதைப் பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது''எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த விவகாரம் அவ்வளவு சீக்கிரம் ஓயவில்லை. கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இந்திய தூதர்களை வரவழைத்து முஹம்மது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்தன.

நூபுர் ஷர்மா யார்?
இந்நிலையில் நுபுர் சர்மா யார்? அவரது பின்னணி என்ன என்பது குறித்து இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகிறது. டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இந்துக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் மற்றும் டெல்லி பல்கலைக்கழக சட்டப்பிரிவில் LLB பட்டம் பெற்றுள்ள 37 வயதான நுபுர் சர்மா, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

அரசியல் பயணம்
ஒரு மாணவர் தலைவராக அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், 2008 ஆண்டில், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் பதவியை வென்றார். காங்கிரஸின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கம் அப்போது டெல்லி பல்கலைக் கலக வளாகங்களில் வலுவாக இருந்த காலம் அது. ஆனாலும் நுபுர் தலைவர் பதவியை பெற முடிந்தது

தேர்தலில் போட்டி
டெல்லி தொகுதியில் 2015ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது நுபுர் சர்மா, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட்டது தான் அவரது குறிப்பிடத்தக்கதுய் தேர்தல். ஆனாலும் அவர் 31,583 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் முக்கிய முகமாக இருந்த சர்மா, இளைஞர் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் டெல்லி மாநில செயற்குழு உறுப்பினர் போன்ற பல பதவிகளை வகித்துள்ளார்.

தொடர் வளர்ச்சி
2017 ஆம் ஆண்டில் அப்போதைய மாநில பிரிவுத் தலைவர் மனோஜ் திவாரி தனது அணியை உருவாக்கிய போது அவர் டெல்லி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 2020இல், ஜேபி நட்டா தனது குழுவை அமைத்தபோது, நுபுர் சர்மா பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிகவும் பிரபலம்
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகிய முக்கிய பிரபலங்களோடு, மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரிராஜ் சிங், பூபேந்திர யாதவ் உள்ளிட்ட பலரும், முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவில் சேர்ந்துள்ளவருமான கவுதம் கம்பீர் உள்ளிட்ட பலர் ட்விட்டரில் நுபுர் சர்மாவை பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications