டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓமிக்ரான்.. அறிகுறி இருந்தும் நெகடிவ் என்று முடிவு வருகிறதா? காரணம் இதுதான்.. நீங்கள் இதை செய்யணும்

Google Oneindia Tamil News

டெல்லி: ஓமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், கொரோனா அறிகுறி இருந்தும் கூட பரிசோதனையில் நெகடிவ் என்று முடிவுகள் வருவது சற்று அதிகரித்துள்ளது.

Recommended Video

    Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil

    கொரோனா அறிகுறிகள் இருந்தும் அல்லது ஒன்றாக இருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு பாசிட்டிவ் என்று வந்த பிறகும் கூட சிலருக்கு மட்டும் கொரோனா பரிசோதனைகளில் நெகடிவ் என்றே தொடர்ந்து முடிவுகள் வரலாம்.

    அதிகப்படியான நபர்களுக்கு இதுபோல நடப்பதில்லை என்றாலும் கூட, குறிப்பிட தகுந்த அளவு நபர்களுக்கு இப்படி நடைபெறுகிறது. இது பொதுவாக Flase negative என்று அழைக்கப்படும்.

    என்ன ஓமிக்ரான் இப்படி எல்லாம் பரவுதா! அப்போ கவனமா இருக்கணும்.. அமெரிக்க நிபுணர்கள் எச்சரிக்கை! என்ன ஓமிக்ரான் இப்படி எல்லாம் பரவுதா! அப்போ கவனமா இருக்கணும்.. அமெரிக்க நிபுணர்கள் எச்சரிக்கை!

     sampling error

    sampling error

    இப்படி நடைபெற பல்வேறு காரணங்கள் உள்ளன. இது தொடர்பாக மருத்துவர் விஜய் தத்தா கூறுகையில், "RT-PCR சோதனையில் பாசிட்டிவ் நோயாளிகள் சிலருக்கு நெகட்டிவ் என்று கூட முடிவுகள் வரலாம். கொரோனா மாதிரிகளைச் சேகரிக்கும் போது ஏற்படும் பிழை அதாவது sampling error இதற்குக் காரணமாக இருக்கலாம். மாதிரிகள் முறையாகச் சேகரிக்கப்பட்டு, அவை 2-5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சரியான கன்டெய்னரில் எடுத்துச் செல்லப்பட்டால் இதுபோன்ற தவறுகள் நடக்காது" என்றார்.

     என்ன காரணம்

    என்ன காரணம்

    மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து சேகரிக்கப்படும் சளியில் இருந்தே ஆர்டி-பிசிஆர் சோதனை செய்யப்படுகிறது. இவற்றின் மாதிரிகள் முறையாகச் சேகரிக்கப்படவில்லை என்றால் அல்லது பரிசோதனை மேற்கொள்ளும் அளவுக்கு அதில் போதுமான சளி இல்லையென்றால் முடிவுகள் துல்லியமாகக் கிடைக்காது. இதுபோல போல மேற்கொள்ளப்படும் ஆர்டி-பிசிஆர் சோதனைகளில் அதிகபட்சமாக 5% வரை தவறான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

     ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    பொதுவாக ஒருவரது உடலில் வைரஸ் நுழைந்து சில நாட்களுக்குப் பின்னரே, அது அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கும். இதை ஆய்வாளர்கள் incubation period என்று அழைப்பார்கள். அதாவது வைரஸ் மனிதனில் உடலில் வருவதற்கும் அறிகுறிகளை வெளிக்காட்டுவதற்கும் உள்ள இடைவெளி அது. எனவே, ஒருவர் கொரோனா பாதிப்பு அறிகுறிகளை வெளிப்படுத்தும் முன்பு, அதாவது incubation periodஇல் இருக்கும் போது டெஸ்ட் நடத்தப்பட்டாலும் நெகட்டிவ் என முடிவுகள் வர வாய்ப்புள்ளது.

     ஓமிக்ரான் கொரோனா

    ஓமிக்ரான் கொரோனா

    ஓமிக்ரான் கொரோனாவை பொறுத்தவரை ஒருவரது உடலில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மூன்று முதல் 6 நாட்களுக்கு பின்ரே அறிகுறிகள் தோன்றத் தொடங்குகிறது. எனவே, அதற்கு முன்பு டெஸ்டிங் செய்தாலும் நெகடிவ் என முடிவுகள் வர வாய்ப்பு அதிகம். PCR தொழில்நுட்பம் துல்லியமானது என்றாலும் கூட அதில் வைரசைக் கண்டறியவும் குறிப்பிட்ட அளவு வைரஸ் துகள்கள் இருக்க வேண்டியது அவசியம். இதனால் இந்த நேரத்தில் டெஸ்டிங் செய்யப்படுவோருக்குத் தவறான முடிவு கிடைக்க வாய்ப்புள்ளது.

    கடினம்

    கடினம்

    இது மட்டுமின்றி ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்படும் பெரும்பாலானோர் அறிகுறி இல்லாத asymptomatic நோயாளிகளாகவே உள்ளனர். அதாவது ஓமிக்ரானால் பாதிக்கப்படுவோரில் சுமார் 54-72 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறிகளும் தெரிவதில்லை. இதனால் ஒருவரது incubation periodஐ கண்டறிவது கூட கடினமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல ஒருவரது வயது, வேக்சின் போட்டுள்ளாரா போன்ற இதர காரணங்களும் கூட இதற்குக் காரணமாக அமைய வாய்ப்புள்ளது.

     என்ன செய்யலாம்

    என்ன செய்யலாம்

    பொதுமக்கள் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட முதல் 10 நாட்கள் வரை மற்றவர்களுக்கு கொரோனாவை பரப்ப வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா நெகடிவ் என்று முடிவுகள் வந்தாலும் கூட அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல வேக்சின் உயிரிழப்புகளைக் குறைக்கும் என்பதால் அனைவரும் 2 டோஸ் வேக்சினை விரைவாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Patients getting Corona negative even, after having Corona symptoms. All things to know about omicron corona and its symptoms in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X