இந்தி பேசாத மாநிலங்களுக்கு இடம் பெயரும் இந்தி பேசும் மக்கள் .. எதற்காக இந்தி இணைப்பு மொழி?
டெல்லி: இந்தி பேசும் மாநிலத்தினர் இந்தி பேசாத மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலையில் இந்தி மொழியை ஏன் இணைப்பு மொழியாக கொண்டிருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து ஒரு புள்ளிவிவரமும் விளக்குகிறது.
தென்னிந்தியாவில் இந்தி திணிப்பு என்பது மீண்டும் துளிர்விட தொடங்கிவிட்டது. ஆங்கிலத்திற்கு மாற்று இந்தி மொழி என அமைச்சர் அமித்ஷா கூறியிருந்த நிலையில் இதற்கு கண்டனங்கள் வலுக்கின்றன.
இந்த நிலையில் இந்தியாவிலேயே இந்தியை தாய் மொழியாக கொண்ட மக்கள் குறைவாக உள்ள நிலையில் எதற்காக இந்தியை இணைப்பு மொழி என்ற கேள்வி எழுகிறது.

புள்ளிவிவரங்கள்
இது குறித்து ஒரு நாளேட்டில் வெளியான புள்ளிவிவரங்களில் இந்தியை தாய்மொழியாக கொண்ட மாநிலங்கள் 26 சதவீதம் மட்டுமே உள்ளன. ஆங்கிலம் பேசுபவர்கள் அதிகம் இருக்கும் தமிழகம் போன்ற மாநிலங்களிலும் இந்தியை சிறப்பாக பேசி வருகிறார்கள். இந்தி அதிகம் பேசும் மாநிலத்தவர்கள் இந்தி பேசாத மாநிலங்களுக்கு இடம் பெயர்கிறார்கள்.

இந்தி பேசும் மாநிலங்கள்
இதற்கு காரணம் வேலைவாய்ப்பு. இந்தி பேசும் மாநிலங்களில் இருப்பதை விட இந்தி பேசாத மாநிலங்களில் அதிக அளவு வேலைவாய்ப்பு இருக்கிறது. தென் இந்தியாவில் மிகவும் குறைந்த அளவிலான சதவீதத்தினரே இந்தியை பேசுகிறார்கள். அது போல் இந்தியை இரண்டாவது மொழியாகவோ மூன்றாவது மொழியாகவோ எடுத்தவர்கள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா
அதில் மகாராஷ்டிராவில் இந்தியை விருப்ப மொழியாக எடுத்தவர்கள் 52.1 சதவீதம பேர், ஒடிஸாவில் 18.8 சதவீதம் பேர், கர்நாடகாவில் 12.3 சதவீதம் பேர் கேரளாவில் 9.1 சதவீதம் பேர், ஆந்திராவில் 12.6 சதவீதம் பேர், தமிழகத்தில் 2.1 சதவீதம் பேர் ஆவார். எனவே தென்னிந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலானோரே இந்தியை விருப்பப்பாடமாக தேர்வு செய்துள்ளார்கள்.

பணிநிமித்தம்
இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்களில் 16.92 லட்சம் பேர் வேறு இந்தி பேசாத மாநிலங்களுக்கு சென்றுள்ளார்கள். அது போல் இந்தி பேசாத மாநிலங்களில் 9.97 சதவீதம் பேர் இந்தி பேசும் மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். பணிநிமித்தமாக இந்தி பேசாத மாநிலங்களில் 2.78 லட்சம் பேரும் கல்விக்காக 12,092 பேரும் இடம்பெயர்ந்துள்ளார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications