இளைஞர்கள் வாக்கு ஓகே.. ஆனா கைதுக்கு நோ கண்டனம்.. கரப்பான் பூச்சி கட்சி தலைவர்கள் கைது! கப்சிப் தவெக

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரப்பான் பூச்சி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் .க. ஸ்டாலினும் கைதுக்கு எதிராக குரல் கொடுத்துள்ள நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகம் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது.

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நேற்று நடந்த போராட்டத்தில் ஜந்தர் மந்தரில் தேசிய கொடியை ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் சௌரவ் தாஸ், ஆஷுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Cockroach Janata party

ராகுல் காந்தி

இதற்கிடையே நாட்டின் நான்கு பிரதான கட்சிகள் கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவாகவும் கைதுக்கு கண்டனம் தெரிவித்தும் கருத்துகளை கூறியுள்ளது. ஜந்தர் மந்தரில் தேசிய கொடியை ஏந்தி போராடுவது குற்றமல்ல என்றும் இளைஞர்களை சிறையில் அடைப்பது கோழைத்தனமான செயல் என்றும் ராகுல் காந்தி சாடியுள்ளார்.. மாணவர்கள், இளைஞர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் வெவ்வேறு அமைப்புகளின் சார்பில் போராடினாலும், அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஒன்றுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கரப்பான் பூச்சி கட்சி நிர்வாகிகள் சௌரவ் தாஸ், ஆஷுதோஷ் ரங்கா ஆகியோர் அக்டோபர் 10ம் தேதி அளித்த அமைதி உறுதிமொழியை மீறியதாகவும், அனுமதியின்றி ஜந்தர் மந்தரில் நுழைந்ததாகவும் கூறி டெல்லி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த இடத்தில் போராட்டம் நட்ட அனுமதி இல்லை என திங்கள்கிழமை தான் போலீசார் அறிவித்திருந்தனர். மறுநாள் இவர்கள் அங்கு தேசிய கொடியுடன் சென்ற நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தேசிய தலைவர்கள்

ராகுல் காந்தி மட்டுமின்றி ஆம் ஆத்மி தலைவரும் மாஜி டெல்லி முதல்வருமான கெஜ்ரிவாலும் இதற்கு கண்டம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "நமது சொந்த நாட்டில் நமது சொந்தக் கொடியை ஏந்துவது குற்றமா? இது முற்றிலும் அபத்தமானது" என சாடியுள்ளார்.

அதேபோல திரிணமூல் காங்கிரஸ் எம்பியும் மம்தாவின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானர்ஜியும் இதை சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "தங்களை மிக பெரிய தேசபக்தர்கள் என்று அழைத்து கொள்பவர்கள், இப்போது இந்தியர்களை அவர்களது சொந்த நாட்டிலேயே மூவர்ணக் கொடியை ஏந்தியதற்காக கைது செய்கிறார்கள்.. இச்செயல் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக மத்திய அரசு சொல்கிறது. பாஜகவின் இந்த புதிய பாரதத்திற்கு உங்களை வரவேற்கிறோம்" என சாடியுள்ளார்.

ஸ்டாலின்

தமிழ்நாட்டில் இருந்து திமுக மட்டுமே இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சௌரவ் தாஸ், ஆஷுதோஷ் ரங்கா ஆகியோருக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க திமுக தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "இந்த அரசால் எத்தனை போராட்டக்காரர்களை கைது செய்ய முடியும்? எத்தனை இளைஞர்களின் குரல்களை பாஜகவால் ஒடுக்க முடியும்?

அவர்கள் எவ்வளவுக்கவ்வளவு இளைஞர்களை சிறையில் அடைக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு சாதாரண குடிமக்களும் வீதிக்கு வந்து, மக்களுக்கு இருக்கும் உண்மையான சக்தியை காட்டுவார்கள்! சௌரவ் தாஸ், ஆஷுதோஷ் ரங்கா ஆகியோருக்கு தேவையான அனைத்து சட்டரீதியான உதவிகளையும் வழங்க திமுக தயாராக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் மவுனம்

அதிமுக இதில் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. அதேபோல தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகமும் இதுவரை மவுனம் காத்தே வருகிறது. அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான விஜய் இது தொடர்பாக எந்தவொரு கருத்துகளையும் கூறவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள், குறிப்பாக Gen Z வாக்காளர்களின் ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. இளைஞர்களின் ஆதரவு தான் தவெகவின் வெற்றிக்கும், திமுகவின் தோல்விக்கும் முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது.

இப்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் இயக்கமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு திமுக குரல் கொடுக்கும் நிலையில் தவெக மவுனமாகவே இருக்கிறது. இளைஞர்களின் ஆதரவை பெற்ற கட்சி, அதே இளைஞர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியையும் பலரும் எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+