நாடாளுமன்றத்தில் 'ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா'வை பாஜகவால் எளிதாக நிறைவேற்றவே முடியாது- ஏன் தெரியுமா?
டெல்லி: நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பாஜகவால் எளிதாக நிறைவேற்றிவிட முடியாது என்பதை அக்கட்சி உணர்ந்துதான் தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அனுப்புவோம் என்கிற முடிவை எடுத்திருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மை என்பது நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இல்லை என்பதால் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை அமல்படுத்தியே தீருவோம் என்பது பாஜகவின் கொள்கை முடிவு. இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்தது.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும் என கூறி வந்தார். நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்படப் போகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த மசோதாவை தாக்கல் செய்யாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வந்தது.
இந்த நிலையில் இன்று லோக்சபாவில் மத்திய அமைச்சர் அர்ஜூன் மேக்வால், ஒரே நாடு ஒரே மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே அனைத்து எதிர்க்கட்சிகளும் மிகக் கடுமையாக எதிர்த்தன. எதிர்க்கட்சிகளின் உக்கிரமான எதிர்ப்பைத் தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இம்மசோதா மீது விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்; இதற்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் பிரதமரின் விருப்பம்; இதனையே எதிர்க்கட்சிகளும் விரும்புகின்றனர் என்றார். இதனையடுத்து இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கூட்டுக் குழு விசாரணை நடத்த 269 பேர் ஆதரவு தெரிவித்தனர்; 198 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.
லோக்சபாவில் எடுத்த எடுப்பிலேயே நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப மத்திய பாஜக அரசு ஒப்புக் கொண்டதற்கும் காரணம் இருக்கிறது. ஏனெனில் திமுகவின் டிஆர் பாலு எம்பி பேசுகையில், பாஜக கூட்டணி அரசுக்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் எப்படி மசோதாவை தாக்கல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்வி மிகவும் சரியானதுதான்.
நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றுவதற்கு 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பெற்றிருக்க வேண்டும். அதாவது லோக்சபாவில் பாஜக கூட்டணிக்கு மொத்தம் 362 எம்.பி.க்கள் வாக்கு தேவை. ஆனால் பாஜக கூட்டணிக்கு ஆதரவு மொத்தமே 298 எம்.பிக்கள் மட்டுமே.
ராஜ்யசபாவில் பாஜகவுக்கு தேவை 158 எம்.பிக்கள். ஆனால் பாஜக கூட்டணிக்கான ஆதரவு எம்பிக்கள் எண்ணிக்கை 135 மட்டுமே. இரு சபைகளிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு அதிகமான எம்பிக்களின் ஆதரவு தேவை. என்னதான் ஒரு சில கட்சிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் கூட தேவையான பெரும்பான்மை ஆதரவு கிடைத்துவிடாது. ஆகையால் இந்தியா கூட்டணியின் ஆதரவு இல்லாமல் மசோதாவை நிறைவேற்றவே முடியாது. இதனை உணர்ந்தே கூட்டுக் குழுவின் விசாரணைக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை நிறைவேற்றுகிறது மத்திய பாஜக அரசு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications