மனித கறி சாப்பிட்டது முதல் உல்லாசத்தின் போது பெவிக்விக் ஊற்றியது வரை .. 2022 ல் நடந்த கொடூர கொலைகள்
டெல்லி: 2022 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய கொடூர கொலைகள் குறித்து அறிந்த மக்கள் இப்படியெல்லாம் செய்ய இவர்களுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ என சொல்லும் நிலைக்கு சென்றுவிட்டனர்.
2022 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் 11 நாட்களே உள்ளன. பின்னர் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்துவிடும். எனினும் 2022 ஆம் ஆண்டு என்னென்ன நிகழ்வுகள் நடந்தன என்பது குறித்து ரீகால் செய்வது வழக்கம்.
அது போல் ரீகால் செய்யும் விஷயங்ளில் சோகம், மகிழ்ச்சி, சாதனை, சோதனை, ஏற்றம், இறக்கம் என நிறைய சம்பவங்கள் வரும். அவற்றில் முக்கியமானவை 2022 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய கொடூர கொலைகள்தான்!

கேரளாவில் நரபலி
இப்படியெல்லாம் சினிமாவில் கூட நடக்காத அளவுக்கு எப்படியெல்லாம் பிளான் போடுகிறார்கள் என்பதை நினைத்தாலே ஈரக்குலையே நடுங்குகிறது. அவை என்னென்ன என்பதை பார்ப்போம். கடவுளின் தேசம் என சொல்லப்படும் கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த இரு பெண்களை டாக்டர் தம்பதி நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மந்திரவாதியின் பேச்சை கேட்டுக் கொண்டு இரு பெண்களை தனித்தனியே வரவழைத்து அவர்களை நிர்வாணமாக அமரவைத்து பிறப்புறுப்பில் பாட்டிலை நுழைத்து பல்வேறு சித்ரவதைகளை செய்து கொன்றுள்ளனர். அதில் ஒருவரது உடலை 56 துண்டுகளாக வெட்டி போட்டுள்ளனர் டாக்டர் தம்பதியான பகவந்த் சிங்- லைலை, மந்திரவாதி முகமது ஷபி ஆகியோர். இது போல் இரு பெண்களை கொன்று அவர்களை புதைத்த இடத்தில் மஞ்சள் செடியை நட்டு வைத்திருந்தனர். மேலும் இவர்களுடைய மனித கறிக்கு மசாலா தடவி குக்கரில் வேகவைத்து சாப்பிட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இது கேரளா மட்டுமல்லாது இந்தியாவையே உலுக்கியது.

காதலனுக்கு விஷம் கொடுத்த காதலி
அது போல் காதல் என்ற பெயரில் பெண் ஒருவர் தனது காதலனை ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்ற சம்பவத்தையும் அதற்கான ஒரு காரணத்தையும் கேட்கும் போது மக்கள் இப்படியெல்லாம் இருப்பார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது. கன்னியாகுமரியில் காரக்கோணம் நெய்யூரை சேர்ந்தவர் கிரீஷ்மா. பாறசாலையை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ். இவரும் காதலித்து வந்தனர். ஆனால் இந்த விஷயம் கிரீஷ்மாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால் மகளிடம் ஷாரோனை மறந்துவிடுமாறு, அவரை விட நல்ல மாப்பிள்ளையை திருமணம் செய்து வைப்பதாக கூறியதால் அந்த பெண்ணும் மனம் மாறியுள்ளார். இதுகுறித்து ஷாரோனிடம் கூறி நல்லபடியாக பிரிந்து விட முடிவு செய்தார். ஆனால் ஷாரோன், என்னை விட்டு பிரிந்தால் நாம் ஒன்றாக ஊர் சுற்றிய ஆதாரங்களை மாப்பிள்ளையிடம் காட்டி விடுவேன் என மிரட்டவே அச்சமடைந்த கிரீஷ்மா, என்ன செய்யலாம் என யோசித்து ஷாரோன் ராஜுக்கு குளிர்பானத்தில் கசாயம் கலந்து கொடுத்து அது ஸ்லோ பாய்சனாக வேலை செய்து திடீரென ஷாரோன் ராஜை கொன்றுவிட்டது. இது தொடர்பாக புகாரின் பேரில் கிரீஷ்மா, அவருடைய தாய், அவருடைய தாய்மாமா ஆகியோர் சிறையில் உள்ளனர்.

பெவிகுவிக் ஊற்றி கொன்ற மந்திரவாதி
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தினமும் கோயிலுக்கு வரும் மீனாவுக்கும் அங்கிருந்த நபர் சோனு சிங்கிற்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது. இருவரும் தனிமையில் சந்தித்து அவ்வப்போது மகிழ்ச்சியாக தங்கள் பொழுதை கழித்துள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அந்த கோயிலில் இருந்த சாமியாருக்கு தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கணவனின் நடவடிக்கையால் சோனு சிங்கிற்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்துள்ளது. இதனால் மனவேதனையடைந்த சோனு சிங்கின் மனைவி கோயிலில் உள்ள சாமியாரை பார்த்துள்ளார். அப்போது அவர் மீனாவுடனான கள்ளக்காதலை சோனு சிங்கின் மனைவியிடம் பற்ற வைத்துவிடுகிறார். இந்த விவகாரத்தால் தம்பதியிடையே பெரிய தகராறே நடந்துள்ளது. கள்ளக்காதலை மனைவியிடம் போட்டுக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த மீனாவும் சோனு சிங்கும் சாமியாரை மிரட்டியுள்ளனர். அவருடைய போலித்தனத்தை வெளியே சொல்லி விடுவதாகவும் மிரட்டினர். இதனால் தனது பிழைப்புக்கு எங்கே பங்கம் வந்துவிடுமோ என அஞ்சிய சாமியார் , சோனுவிடமும் மீனாவிடமும் நல்லபடியாக பேசியுள்ளார். மேலும் இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கு இவர்களுடைய கள்ளக்காதல் தெரிந்தாலும் அதை பிரிக்க முடியாத படி தான் மந்திரம் செய்வதாக கூறி அத்துடன் ஒரு காட்டில் இருவரையும் உல்லாசமாக இருக்கக் கூறியுள்ளார். அப்போது தாம் வந்து மந்திர நீரை தெளிக்கிறேன், அதன் பிறகு எந்த பிரச்சினையும் வராது என கூறியுள்ளார். இதை நம்பிய இருவரும் சாமியார் சொன்னது போல் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சாமியார் இவர்களை பழித்தீர்க்க பெவிகுவிக்கை ஒரு பாட்டிலில் ஊற்றி கொண்டு வந்து தெளித்தார். இதனால் இருவரும் ஒட்டி கொண்டனர். அதையும் மீறி எழும்போது சதைகள் கிழிய தொடங்கின. இருவரையும் கற்களால் கொடூரமாக தாக்குகிறார் சாமியார். மேலும் சோனு சிங்கின் ஆண் உறுப்பு வெட்டப்பட்டுவிடுகிறது. மீனாவின் உறுப்பிலும் பயங்கர காயங்கள், இதனால் இருவரும் வலி தாள முடியாமலும் சாமியார் தாக்குதலாலும் கொலை செய்யப்பட்ட சம்பவமும் நாட்டையே உலுக்கியது.

ஓடும் ரயில் முன் மாணவி தள்ளப்பட்டு கொலை
கடந்த அக்டோபர் மாதம் சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பை சேர்ந்த மாணிக்கம்- ராமலட்சுமி தம்பதியின் மகள் சத்யா (20). இவர் திநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் சத்யாவை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சத்யாவை பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு பின்தொடர்ந்து வந்த சதீஷ் அவரிடம் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு சத்யா மறுத்துள்ளார். இதனால் அப்போது அவ்வழியாக ரயில் வரும் நேரத்தில் சத்யாவை சதீஷ் தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். அதில் சத்யாவின் தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். மகளின் இறப்பை தாங்க முடியாத தந்தை மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை இரட்டை கொலை
கடந்த மே மாதம் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஆடிட்டர் தம்பதியை இரட்டை கொலை செய்த வடநாட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார். மயிலாப்பூரை சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60). இவருடைய மனைவி அனுராதா (55). இவர்கள் மார்ச் மாதம் அமெரிக்காவிலுள்ள மகள் சுனந்தாவின் வீட்டிற்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். அவர்களை ஓட்டுநரான கிருஷ்ணா அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர்களை மகள் சுனந்தா தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர்களின் போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தனது உறவினரை தொடர்பு கொண்ட சுனந்தா , வீட்டுக்கு சென்று பார்த்து வருமாறு கூறினார். அவர் ஆடிட்டர் வீட்டுக்கு சென்ற போது வீடு பூட்டியிருந்தது. இதனால் சந்தேகமடைந்து போலீஸாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் கார் ஓட்டுநர் கிருஷ்ணாவை பிடித்து விசாரணை செய்த போதுதான் தம்பதியை நகை, பணத்திற்காக கொன்று நெமிலிச்சேரி அருகே உள்ள பண்ணை வீட்டில் புதைத்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் சொன்னது போல் பண்ணை வீட்டில் புதைத்த இடத்தை தோண்டி பார்த்த போது தம்பதி உட்கார்ந்த நிலையில் புதைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தின் தலைநகர் சென்னையே உலுக்கியது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications