You Are Great.. மோடிக்கு, டிரம்ப் அனுப்பிய கிப்ட்.. என்ன எழுதி இருக்குனு பாருங்க!
டெல்லி: இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் டெல்லி வந்துள்ள நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழங்கிய கிப்ட்டை மோடியிடம் வழங்கினார். அதில் டிரம்ப் தனது கையெழுத்திட்டு எழுதியிருந்த ஒற்றை வரி கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவுக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் காரணம். டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்தார். அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி இந்த வரியை விதித்தார்.

இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவு சீர்க்குலைந்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது.
இதற்கிடையே தான் சமீபத்தில் இந்தியாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதராக செர்ஜியோ கோர் என்பவரை அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்தார். அவர் தற்போது இந்தியா வந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது டொனால்ட் டிரம்ப் சார்பில் அனுப்பிய கிப்ட்டை செர்ஜியோ கோர், மோடியிடம் வழங்கினார்.
அந்த கிப்ட் என்னவென்றால் மோடியும், டிரம்பும் சேர்ந்து இருக்கும் போட்டோவாகும். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அந்த போட்டோவை டொனால்ட் டிரம்ப், மோடிக்கு கிப்ட்டாக அனுப்பி உள்ளார். அதில் டிரம்ப் தனது கையெழுத்திட்டுள்ளார். ‛‛Mr Prime Minister You Are Great'' என எழுதியுள்ளார். அதாவது சிறந்த பிரதமர் என்று மோடிக்கு, டிரம்ப் புகழாரம் சூட்டி உள்ளார்.
டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்த பிறகு தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து பிரதமர் மோடி சீனாவுக்கு சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்தித்து இருநாடுகள் இடையேயான எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண்பது, வர்த்தகத்தை அதிகரிப்பது பற்றி பேசினார். இது டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
ஏனென்றால் சீனாவும், அமெரிக்காவுக்கும் பகையாளியாக உள்ளன. சீனாவின் ஆதிக்கத்தை ஆசியாவில் தடுக்க வேண்டும் என்றால் நம் நாட்டின் ஆதரவு அமெரிக்காவுக்கு வேண்டும். ஆனால் நம் நாடு, சீனாவுடன் கைகோர்த்ததால் அது டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இதையடுத்து டிரம்ப், நம் நாட்டை விமர்சிப்பதை குறைத்து இப்போது முற்றிலுமாக கைவிட்டுள்ளார். இப்படியான சூழலில் தான் அவர்கள் 2 பேரும் இருக்கும் போட்டோவை டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடிக்கு கிப்ட்டாக அனுப்பி ‛‛Mr Prime Minister You Are Great'' என புகழ்ந்துள்ளார். இது இந்தியா - அமெரிக்கா இடையோன உறவில் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications