பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படமா.. எதுவானாலும் இந்திய சட்டப்படி இருக்கனும் - அன்புமணி அட்வைஸ்
பிபிசி வெளியிட்டு இருக்கும் மோடி குறித்த ஆவணப் படம் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
தருமபுரி: பிரபல சர்வதேச ஊடகமான பிபிசி வெளியிட்டு இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப் படத்தை இந்திய சட்டங்களுக்கு உட்பட்டே தயாரித்து இருக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார். பிபிசி வெளியிட்டு இருக்கும் ஆவணப் படத்துக்கு மத்திய அரசு தடை விதித்து இருக்கும் நிலையில் அன்புமணி இவ்வாறு கூறி உள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தருமபுரியில் முதன்மை பிரச்சனையாக குடிநீர் பிரச்சனை உள்ளது. அடுத்து பாசனத் திட்டம் பிரச்சனையாக இருந்து வருகிறது.

குடிநீரில் பிரச்சனை
இதன் காரணமாக மனிதர்களின் உடலில் இருக்கும் எலும்பு, பல் போன்றவற்றின் வளர்ச்சி மற்றும் வலிமை பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கும் ப்ளூரோசிஸ் என்ற பாதிப்பு குடிநீர் மூலம் ஏற்படுகிறது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீரில் புளோரை என்ற நச்சுப்பொருள் கலந்து இருக்கிறது.

ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்
இதனை தடுக்க பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், இந்த திட்டத்தின் மூலமாக இரண்டு மாவட்ட மக்களுக்கு குடிநீர் முழுமையாக வழங்கப்படவில்லை. கிராமங்களில் ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீரையும் உள்ளூரில் இருக்கும் நிலத்தடி நீரையும் கலந்து விநியோகிக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும்.

வீணாகும் நீர்
ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்யும்போது 500 டிஎம்சி உபரிநீர் காவிரி ஆற்றின் வழியே சென்று கடலில் வீணாக கலந்து வருகிறது. நீரேற்றும் திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 3 டிஎம்சி தண்ணீர் மாவட்ட நீர்நிலையில் நிறைத்து வேளாண் தொழிலின் முன்னேற்றத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நாம் கோரி வருகிறோம்.

மது ஒழிப்பு
குடியரசு தின விழாவில் சென்னையில் கள்ளச்சாராயத்தை ஒழித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதே தினத்தில் கரூரில் மது விற்பனை சிறப்பாக நடைபெறுவதற்கு காரணமாக இருந்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

திராவிட மாடல்
திராவிட மாடல் ஆட்சி என்பது மதுவை சார்ந்து இயங்குவது தானா? மது தொடர்பாக திமுக அரசின் நிலைபாடு என்ன என்று தெளிவுபடுத்திட வேண்டும். போதை பொருள் ஒழிப்பு பிரிவில் 20 ஆயிரம் காவலர்களை நியமிக்க வேண்டும். பாமகவுக்கு இடைத் தேர்தல் மீது நம்பிக்கை இல்லை. இடைத் தேர்தல்கள் அவசியமில்லை என்று நினைக்கிறேன்.

பிபிசி ஆவணப்படம்
அதன் காரணமாகவே பென்னாகரத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலுக்கு பிறகு எந்த இடைத் தேர்தலிலும் பாமக போட்டியிடவில்லை. பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் தவறான காட்சிகள் வருவதாக பாஜக கூறுகிறது. எந்த படத்தை வெளியிட்டாலும் அது இந்திய சட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருந்திட வேண்டும்." என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications