'அது ஒரு ஃபெய்லியர் புராஜெக்ட்.. மோசம்'.. அண்ணாமலையின் அமெரிக்க உரை.. விளாசிய திமுக எம்பி
தருமபுரி: சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அங்கு தமிழர்களிடையே சிறப்புரையாற்றியிருந்தார்.
அப்போது மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக கூறியிருந்தார். இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
தற்போது அண்ணாமலையின் கருத்துக்கு திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் பதிலளித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கு.. கிடைக்காத விடுதலை! ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்ட பரோல்

பயணம்
தனது உயர்கல்வி தொடர்பாக 2 வாரம் அமெரிக்கா சென்றுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. இவ்வாறு இருக்கையில், அங்கு தமிழர்கள் மத்தியில் பேசி வருகிறார். இதன் ஒரு அங்கமாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள தமிழர்கள் மத்தியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து 'தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்' எனும் தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியிருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக எம்பி செந்தில் குமார் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

சிறப்புரை
அதாவது லாஸ் ஏஞ்செல்சில் உரையாடிய அண்ணாமலை, "தமிழகத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 55 லட்சம் லாய்லெட்டுகள் 'ஸ்வெச் பாரத்' திட்டம் மூலம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம மக்கள் தங்களுக்கு கௌரவம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளனர்." என்று அண்ணாமலை தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதே நேரம் மத்திய அரசின் இதர பல திட்டங்களையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

ரூ.12,000க்கு கழிவறையா?
இந்த வீடியோ குறித்து தற்போது திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் விமர்சனம் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது, "மத்திய அரசின் கீழ் கட்டப்பட்டுள்ள 55,11,791 கழிவறைகள் ரூ.12,000 என்கிற விகிதத்தில் கட்டப்பட்டுள்ளன. அதாவது ஒரு கழிவறைக்கு ரூ.12,000. நான் சவால் விடுகிறேன் இவ்வாறு கட்டப்பட்ட கழிவறைகளில் 95% பயனற்றுதான் கிடக்கிறது. ஏனெனில் ரூ.12,000க்கு நிச்சயம் ஒரு கழிவறையை கட்ட முடியாது." என்று குறிப்பிட்டுள்ளார்.

தோல்வி திட்டம்
மேலும், "இது தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சருக்கு கேள்வியெழுப்பியிருந்தேன். இவ்வாறு 95% கழிவறைகள் பயனற்றவையாக இருப்பதற்கு முறையற்ற மதிப்பீடு மற்றும் தவறான திட்டமிடல்தான் காரணம். ஆக இப்படியாக தமிழ்நாட்டில் மட்டும் ரூ.66 ஆயிரம் கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் தோல்வி திட்டம். இவ்வளவு தொகை வீணடிக்கப்படாமல் வேறு திட்டத்திற்கு செலவிடப்பட்டிருந்தால் எவ்வளவு ஆக்கப்பூர்வமாக இருந்திருக்கும்? என யோசித்து பாருங்கள்" என கூறியுள்ளார்.
இந்த ட்வீட் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.