அதிமுக ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி! பாஜகவுடன் எந்த தொடர்பும் இல்லை! -எடப்பாடி பழனிசாமி உறுதி
தருமபுரி: அதிமுக ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி என்றும் பாஜகவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
தருமபுரியில் 100 ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுகவினர் ஏதேதோ பேசி வருகிறார்கள் என்றும் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் மிகத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதிமுக பாஜக கூட்டணி இருப்பதாக ஸ்டாலின் தவறான பிரசாரத்தை செய்து வருகிறார் என்றும் சிறுபான்மையினர் வாக்குகளை இனி ஏமாற்றி வாங்க முடியாது என்பதாலேயே அவர் இவ்வாறு பேசுகிறார் எனவும் எடப்படி பழனிசாமி சாடினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்ட காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
ஏழைப் பெண்களின் திருமணம் தடைப்படக்கூடாது என்பதற்காகவே திருமண உதவி திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார் என்றும் அதன் மூலம் 12 லட்சம் குடும்பத்தினர் பயனடைந்த நிலையில், ஸ்டாலின் அதனை நிறுத்தி விட்டார் என குற்றஞ்சாட்டினார். அதேபோல் கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், அம்மா குழந்தைகள் பெட்டகம் வழங்கபட்டதாகவும் ஏழை மக்களின் வசதிக்காக 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டதாகவும் கடந்த அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை பட்டியலிட்டார்.
பெண்கள் சுயஉதவிக் குழுவுக்கு அதிக சுழல் நிதி கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது அனைத்தையும் திமுக அரசு நிறுத்தி விட்டதாகவும் குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும் காங்கிரசும் தான் என சாடிய அவர், தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாகவும் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது எதையுமே நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்தால், அனைத்து பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்று சொல்லிவிட்டு இப்போது தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே கொடுப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
-
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
தர்மபுரி முதல் பெரம்பூர் வரை! பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்?












Click it and Unblock the Notifications