அசத்தல்.. பெண்களுக்கு ரூ.7000 மானியம்.. மோட்டார் பம்ப்செட் ரெடி.. தர்மபுரி விவசாயிகளுக்கு செம்ம குஷி
தர்மபுரி: மோட்டார்கள் தேவைப்படும் விவசாயிகளில் சிறு, குறு ஆதிதிராவிடர்/ பழங்குடியினர், பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில், அரசு பெரும் அக்கறையை செலுத்தி வருகிறது.. இதற்காக பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது.

மின்மாற்றிகள்: இதில் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்று வருவது, மானிய விலையில் வழங்கப்படும் பம்ப் செட்டுகள் குறித்த அறிவிப்புகளாகும்.. ஏனென்றால், குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை பயன்படுத்துவதால், மின் நுகர்வு அதிகமாகிவிடுவதுடன், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் நேரமும் அதிகமாகி, மின்மாற்றியும் அதிக சுமை ஏற்பட்டு விரைவில் பழுதாகிவிடுகின்றன.
எனவேதான், புதிய கிணறுகளை உருவாக்கும் விவசாயிகளுக்கும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கும் புதியதாக மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு மானிய உதவியை தமிழக அரசு வழங்கி வருகிறது.. மின்சார பயன்பாட்டு திறனை அதிகரித்தல், குறைந்த செலவில் அதிகமான பாசன நீர் இரைத்தல் போன்றவையே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
புதிதாக கிணறு: பாசனத்திற்கான மின்மோட்டார் பம்பு செட்டுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில், பழைய பம்புசெட்டை மாற்றி, புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகளை நிறுவிக் கொள்ளலாம். அல்லது 50% மானியத்தில் புதிதாக கிணறு அமைத்து, சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும், இந்த திட்டத்தில் பயன் பெறலாம்..
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்காக 1000 எண்கள் பம்பு செட்டுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை உண்டு. அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின் மோட்டார்களையும், 4 ஸ்டார் தரத்திற்கு குறையாமல் உள்ள மின்மோட்டாரையும் தேர்வு செய்யலாம்.
பாசன வசதி: இந்த திட்டத்தின் பயனை பெற வேண்டுமானால் https://mis.aed.tn.gov.in என்ற வெப்சைட்டில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் பாசன வசதிக்கான உதவிகளை பெறலாம். உழவன் செயலி மூலமாகவோ, அல்லது நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு (MIMIS) என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
இப்படிப்பட்ட சூழலில், தானியங்கி பம்பு செட் கருவியை மானியத்தில் வாங்க தருமபுரி மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.. இதுகுறித்து, வெளியிட்ட செய்தி குறிப்பில், "விவசாயத்தில் நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவும் விவசாயிகள் காலத்தே சாகுப்படிப் பணிகளை மேற்கொண்டு பயிர் உற்பத்தித் திறனை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு, வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி வருகிறது.
வேளாண் இயந்திரங்கள்: நடப்பு (2024-25 ஆம்) நிதி ஆண்டில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தில், தருமபுரி மாவட்டத்திற்கு, அலைபேசி வாயிலாக செயல்படுத்தும் (Mobile Phone operated Automatic Pumpset controller / Remote Motor operator for electric pumpset) ரூ.13.09/- இலட்சம் மதிப்பிலான 187 மின் மோட்டார்கள் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
எனவே மேற்படி மோட்டார்கள் தேவைப்படும் விவசாயிகளில் சிறு, குறு ஆதிதிராவிடர்/ பழங்குடியினர், பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக ரூ.7000/- மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச மானியத் தொகையாக ரூ.4000/- வழங்கப்படுகிறது.
மானியம்: எனவே மேற்படி மோட்டார்கள் வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் 1). உதவி செயற்பொறியாளர்(வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி (தொலைப்பேசி: 04342 296132) மற்றும் 2). உதவி செயற்பொறியாளா (வே.பொ), வேளாண்மைப் பொறியியல் துறை, ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின் ரோடு, அரூர், தருமபுரி (தொலைப்பேசி: 04346296077) அலுவலகங்களை தொடர்பு கொண்டு உரிய வழிமுறைகளின்படி மானியத்தில் பெற்று பயன்பெறலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது .
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications