திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பழனியை வாங்கியே தீர வேண்டும்.. ஆர்வம் காட்டும் பாஜக.. எதிர்த்து நிற்கப்போது யார் தெரியுமா?

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: ஆன்மீக நகரான பழனி சட்டமன்ற தொகுதியை கேட்டுப்பெற வேண்டும் என்பதில் பாஜக மிக தீவிரமாக வேலை செய்து வருகிறது. ஆனால் அங்கு பாஜகவினர் திண்டுக்கல் ஐ பெரியசாமியின் மகன் ஐபி செந்தில்குமாரை எதிர்த்து நிற்கவேண்டியது இருக்கும். இதனால் கடும் சவாலாக இருக்க போகிறது பழனி தொகுதி தேர்தல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சட்டமன்ற தொகுதி என்பது பழனி நகரம் மற்றும் கொடைக்கானல் நகரம் மற்றும் கொடைக்கானல் மலை கிராமங்கள் மற்றும் பழனியை சுற்றியுளள கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியாகும். மிக நீண்ட பரப்பளவு கொண்ட இந்த தொகுதியில் பொதுவாக அதிமுகதான் போட்டியிடும்,

ஆனால் இம்முறை பழனி சட்டமன்ற தொகுதியை கேட்டு பெற வேண்டும் என பாஜக விரும்புகிறது. இதனால் அங்குள்ள உள்ளூர் அதிமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தாமரை சின்னம்

தாமரை சின்னம்

எப்படியும் தங்களுக்கு பழனி தொகுதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் சுவர் விளம்பரங்கள் வரையும் வேலையிலும் பிஸியாக இறங்கி உள்ளது பாஜக. கொடைக்கானல் செல்லும் மலை சாலையில் பாஜகவின் தாமரை சின்னம் வரையப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது.

திமுக வெற்றி

திமுக வெற்றி

கடந்த 25 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களே மாறி மாறி வெற்றி பெற்று பெறுகிறார்கள். 2011ம் ஆண்டு கேஎஸ் வேணுகோபால் வெற்றி பெற்றார். 2016 சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் ஐ பெரியசாமியின் மகன் ஐபி செந்தில்குமார் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.

பாஜக வெற்ற வாக்குகள்

பாஜக வெற்ற வாக்குகள்

கடந்த 2016 தேர்தல் பாஜக சார்பில் போட்டியிட்ட கனகராஜ் வெறும் 4092 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட குமாரசாமி 74459 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஐபி செந்தில்குமா 100045 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

பாஜகவிற்கு கிடைக்கலாம்

பாஜகவிற்கு கிடைக்கலாம்

இந்த தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் ஐபி செந்தில்குமார் போட்டியிடவே வாய்ப்பு உள்ளது. இந்நிலையில்தான் பாஜகவினர் பழனி தொகுதியை குறிவைத்து வேலை செய்து வருகிறார்கள். தற்போது பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் இதில் பழனியும் இடம் பெறுமோ என்ற அச்சம் அதிமுகவினரிடையே எழுந்துள்ளது. இதனிடையே திமுகவிற்கு செல்வாக்கு அதிகமாக உள்ள தொகுதியாக கருதப்படும் பழனியை அதிமுக மேலிடம் பாஜகவிற்கு தள்ளிவிடவே அதிக வாய்ப்பு உள்ளாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

English summary
tamil nadu assembly election 2021: BJP wants Palani assembly constituency, but aiadmk members worry., dmk's I.P.Senthil Kumar again contest Palani assembly constituency this time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X