டீச்சர்! டீச்சர் அவன் ஊசி போட்ட கையை தொட்றான்.. மழலை குரலில் "வத்தி" வைத்த 1ஆம் வகுப்பு திருக்குமரன்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 1ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் சக மாணவன் மீது மழலை குரலில் புகார் அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா வடமதுரை அருகே உள்ளது மேட்டுப்பட்டி. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் படிக்கும் பள்ளியில் சுகாதாரத் துறையின் சார்பில் தடுப்பூசி போடப்பட்டது.

Dindigul class 1 student in his childish voice complaint about another boy

மேலும் சத்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் அங்கு 1ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் திருக்குமரன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த சிறுவன் முகத்தில் எத்தனை அப்பாவித்தனம் , எத்தனை பக்குவம், ஆனால் பேச்சு மட்டும் மழலையாக காதுக்கு இனிமையாக இருக்கிறது.

அய்யோ அந்த டீச்சராக நாம் இல்லையே என "வருந்தும்" அளவுக்கு சிறுவன் மழலையில் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறான். டீச்சரிடம் போன திருக்குமரன், "டீச்சர் டீச்சர் அவன் ஊசி போட்ட இடத்தில் தொட்டுக்கிட்டே இருக்கான். எனக்கு வலிக்குது. ஊசி போட்ட எல்லார் கையையும் அவன் தொட்டுட்டே இருக்கான்" என புகார் செய்தான்.

அதற்கு டீச்சர் "அவன் ஏன் உன்னையும் மற்றவர்களையும் தொட்டுக்கிட்டே இருக்கான்" என கேட்டார் (டீச்சரும் கொஞ்சும் மொழியில்). அதற்கு அந்த சிறுவன் டீச்சர் நீங்க இரவு சாப்பிட சொல்லி கொடுத்த மாத்திரையை (மாத்திரையை காட்டுகிறான்) அவன் இப்பவே வாய்க்குள்ள போடுறான் என சொன்னான். அதற்கு அவர் நான் நைட்டுதானே சாப்பிடணும், அதுவும் அரை மாத்திரைதான் சாப்பிடணும் என டீச்சர் சொல்ல அதற்கு அந்த மழலை செல்லமோ ஆமாம் என சொல்ல இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

குழந்தைகள் தெய்வத்திற்கு சமம் என்பார்கள். எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே என்ற பாடல் உண்டு. அதற்கேற்ப குழந்தைகளுக்கு சூது வாது தெரியாது, நல்லது கெட்டது தெரியாது. அவர்கள் வளர வளர வெளியுலகத்தை பற்றி புரிந்து கொள்கிறார்கள். மேலும் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து பெறும் அறிவுரையை பொருத்தும் அவர்களுடைய நல்லது கெட்டதை பிரித்து பார்க்கும் அறிவு வளர்கிறது.

குழந்தைகளின் மழலை என்பது நம் காதில் தேன் போல் அத்தனை சுவையாக இனிக்கும். அதுவும் பள்ளிகளில் இவர்களுடைய மழலையை கேட்டால் அத்தனை கவலையும் நீங்கி டீச்சரும் வாத்தியாரும் குழந்தை போல மாறி வேறு உலகிற்கு சென்றுவிடுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+