அண்ணன் ஆப்பிளை மறக்க மாட்டார் போலயே.. அதிமுகவினர் நக்கல்.. பாமகவுக்கோ சிக்கல்!
3-வது முறையாக திண்டுக்கல் சீனிவாசன் ஆப்பிள் சின்னம் தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
Recommended Video

திண்டுக்கல்: "அண்ணன் ஆப்பிளை மறக்க மாட்டார் போலயே" என்று அதிமுகவினர் கிண்டலடிக்க.. இத்தனை முறை பல்பு வாங்கியும் எங்க சின்னத்தை ஒழுங்கா சொல்ல மாட்டேங்குறாரே என்று பாமகவினர் எரிச்சலடைய.. 3-வது முறையாக பாமக சின்னத்தை உளறி இருக்கிறார் திண்டுக்கல்லார்!
2 நாளைக்கு முன்னாடிதான் பாமக சின்னம் மாம்பழத்துக்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டு கேட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!
இதை வைத்து நெட்டிசன்கள் இன்னமும் ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் 3-வது முறையாகவும் இதே தவறை செய்திருக்கிறார் அமைச்சர்! திண்டுக்கல் அனுமந்த நகர், மாலைப்பட்டி, தோட்டனூத்து பகுதிகளில் பிரச்சாரம் செய்யும்போது திரும்பவும் அதே ஆப்பிள்தான்!

களங்கமில்லா பேச்சு
பொதுவாக இப்படி மாற்றி பேசுவது திண்டுக்கல் சீனிவாசனுக்கு இயல்பான விஷயம். மனசில் ஒரு கலங்கமுமில்லாமல் அப்படி அப்படியே வெளிப்படையாகவும், மறந்து போயும் பேசிவிடுவார். இதை மற்றவர்களும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் சிரித்து விட்டுவிடுவார்கள். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை.

திணறிய பாமக
திண்டுக்கல்லில் இந்த முறை அதிமுகவுக்கு பதிலாக பாமக போட்டியிடுகிறது. செல்வாக்கே இல்லாத இடத்தில் பாமகவுக்கு தொகுதியை ஒதுக்கியது அதிமுக. அதிலும் வேட்பாளர் கிடைக்க அக்கட்சி தலைமை நிறையவே திணறிவிட்டது!

திணறடிக்கிறார்
ஒருவழியாக வேட்பாளராக ஜோதிமுத்து தேர்வாக, அவர் திண்டுக்கல் சீனிவாசன் கையில் சிக்கி கொண்டார். வேட்பாளரை மாற்றி ஓட்டு கேட்பது, சின்னத்தை மாற்றி ஓட்டு கேட்பது என திணறடிக்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்.

வாடிய முகம்
இதனால் பாமக தரப்பில் எல்லோருமே செம அப்செட்டாக இருக்கிறார்களாம்! அதிலும் அமைச்சர் கூடவே பிரச்சாரத்தின்போது பயணிக்கும் வேட்பாளர் ஜோதிமுத்து நிலைமையோ இன்னும் பரிதாபம். ஒவ்வொரு முறை அமைச்சர் தப்பாக சின்னத்தை சொல்லும்போதும் ஜோதிமுத்து கிறுகிறுத்து போய்விடுகிறாராம்.. முகமும் வாடிப்போகிறதாம்!
ஆக... ஐசக் நியூட்டனுக்கு அடுத்தபடியாக இந்த ஆப்பிள் பழம் ஃபேமஸ் ஆகி கொண்டிருப்பது திண்டுக்கல் சீனிவாசனால்தான் என்றால்.. அது மிகையல்ல!
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications