அண்ணே கொஞ்சம் இருங்க.. 8.15-க்கு தான் உள்ளே போகனும்! பழனி’சாமி’யை தரிசித்த பழனிசாமி! என்ன காரணமாம்?
திண்டுக்கல் : அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவி ஏற்றதற்கு பிறகு முதன்முறையாக புகழ்பெற்ற பழனி தண்டாயுத சுவாமி கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி ஏழரை மணிக்கே சென்றாலும் 8.15 மணிக்கு தான் கோவிலுக்கு செல்வேன் என சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் மேற்கொண்டார்.
Recommended Video
பல்வேறு கட்ட அரசியல் நடவடிக்கைகளுக்குப் பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி டெல்லி, சென்னை, சேலம் தவிர கடந்த ஒரு மாதமாக வேறு எங்கும் செல்லவில்லை.
இந்நிலையில் திடீரென திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள உலகப் புகழ்பெற்ற முருகன் ஆலயத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் தங்கத்தேர் இழுத்து வழிபாடு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.

எடப்பாடி பழனிசாமி
திடீர் பயணத்திட்டம் என்றாலும் அதிமுகவில் தற்போது முக்கிய பதவிகளை பெற்றுள்ள துணை பொதுச்செயலாளரான நத்தம் விஸ்வநாதன், பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இணைந்து பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதனையடுத்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் சார்பில் இதுவரை இல்லாத அளவு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழனி கோவிலில் தரிசனம்
பழனி பேருந்து நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்க அங்கு போடப்பட்டிருந்த மேடைக்கு வந்த அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து பழனி கோவிலுக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவில் சார்பில் தனியாகவும், அதிமுக சார்பில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பின்னர் இரவு மலைக்கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி தங்கத் தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தார்.

வழிபாடு
பின்னர் மீண்டும் மலைக் கோவிலில் இருந்து புறப்பட்டவர் பழனி கிரிவல வீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார். அதிகாலை ஏழு மணிக்கு தங்கும் விடுதியில் இருந்து புறப்பட்டவர் 7.15 மணிக்கு ரோப் கார் நிலையம் சென்றார். அங்கிருந்து மலை கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மட்டும் சென்றனர். தொடர்ந்து பிரகாரம் முழுவதையும் சுற்றி வந்தார். கால சாந்தி பூஜையில் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தார். வேடர் அலங்காரத்தில் காட்சி தந்த முருகனையும் சிறிது நேரம் கழித்து பால சுப்பிரமணிய சுவாமி அலங்காரத்தில் இருந்த முருகப்பெருமானையும் தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். இந்த தரிசனத்தின் போது எடப்பாடி பழனிச்சாமியுடன் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன் ஆர்.பி.உதயகுமார் சுவாமி தரிசனம் செய்தனர்.

8.15 மணி
முன்னதாக 8 மணி அளவில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கோவில் வளாகத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது அவரை தடுத்த எடப்பாடி பழனிச்சாமி வேண்டாம் வேண்டாம் 8.15 மணிக்கு தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்றார். தொடர்ந்து 8.10 மணி வரை காத்திருந்த நிலையில் அந்த மூத்த நிர்வாகி மீண்டும் கோவிலுக்குள் நுழைய முயன்ற போது அப்போதும் தடுத்த அவர் 8:15 மணிக்கு தான் சரியாக உள்ளே செல்ல வேண்டும் என கூறினார். இதனால் அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் குழப்பமடைந்த நிலையில், ஏற்கனவே சொல்லி இருந்தது போல வேடம் அலங்காரம் அதன்பிறகு சுப்ரமணிய சுவாமி அலங்காரம் இரண்டையும் ஒருசேர தரிசித்தால் நற்பயன்கள் கிடைக்கும் எனவும், அதன் காரணமாகவே சரியாக 8.15 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி கோவிலுக்கு சென்றதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
-
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications