எல்லா இடத்திலும் ’அட்ஜஸ்ட்மெண்ட்’.. இயக்குனர்கள் உடன் சகஜமான உறவு! ஓபனாக பேசிய மணிரத்னம் பட நடிகை
டெல்லி: பாலிவுட்டில் கடந்த 1990களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை அனு அகர்வால், காஸ்டிங் கவுச் என அழைக்கப்படும் பாலியல் அட்ஜெஸ்ட்மெண்ட் தொடர்பான தனது கருத்தை வெளிப்படையாக பேசியுள்ளார். 'ஆஷிகி' படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகையான அனு அகர்வால், ஆண், பெண் என இருவரும் இருக்கும் அனைத்து துறைகளிலும் இது இருக்கும் என கூறி அதிர வைத்திருக்கிறார். இவர் தமிழில் மணிரத்ணம் திருடா படத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1990 கால கட்டங்களில் பாலிவுட், கோலிவுட் உள்ளிட்ட சினிமா துறைகளில் பிரபலமாக வலம் வந்தவர் அனு அகர்வால் 'ஆஷிகி' என்ற இந்தி படத்தில் அறிமுகமான அவர் மிகக் குறைந்த திரைப்படங்களிலேயே நடித்திருந்தார்.
குறிப்பாக தமிழில் திருடா திருடா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் இடம் பெற்றிருந்த 'கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு' பாடலில் நடித்தவர் தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1999 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் கோமாவில் இருந்த அவர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்தார். அதற்குப் பிறகு திரை உலகில் இருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அன்யூஸ்வல் என்ற தனது சுயசரிதை மூலம் பாலிவுட்டில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இந்த நிலையில் திரையுலகில் 'காஸ்டிங் கவுச்' பாலியல் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசி தற்போது அதிர வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக இணையதளம் ஒன்று இடம் பேசிய அவர்,"காஸ்டிங் கவுச்சை மறைத்து பேசுவதற்கு தேவையே இல்லை. ஏன் நாம் பொய்யாக நடிக்க வேண்டும்? எனது திரைத்துறை வாழ்க்கையில் இயக்குனர்கள் உடன் நெருங்கிய சகஜமான உறவை பேணியுள்ளேன். ஆனால் எந்த விதமான காஸ்டிங் கவுச்சையும் சந்திக்கவில்லை. எந்த துறையிலும் காஸ்டிங் கவுச் இல்லாமல் இருக்கிறது. வங்கி, நிறுவனங்கள் என எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு சக்திகள் உள்ள இடத்தில் இது எப்போதும் இருக்கும். இது மனித இனத்தின் இயல்பு
யாரும் உங்கள் திறமையை பயன்படுத்தாமல் விட்டால், அதுதான் மோசம். காஸ்டிங் கவுச்சில் என்ன தவறு? அதை விட நீங்கள் உங்கள் திறமையைச் சரியாக பயன்படுத்தாமல் இருப்பதே தவறு. எனது இயக்குனர்களுடன், குறிப்பாக மகேஷ் பட்டுடன், நெருங்கிய மற்றும் தொழில்முறை உறவை மட்டுமே பேணினேன். அவருடன் எந்தவித ஒழுக்கம் மீறிய செயல்களில் ஈடுபட்டது இல்லை. காஸ்டிங் கவுச் பாலிவுட் மட்டுமல்லாது, பல்வேறு தொழில் துறைகளிலும் நிலவுகிறது. அனு அகர்வாலின் அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த கருத்துகள், பாலிவுட்டில் காஸ்டிங் கவுச் விவகாரத்தை மீண்டும் பரபரப்பாக மாற்றியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications