'அடுத்து வழிநடத்தும் தலைவர் உதயநிதி தான்.. அவரை விரைவாக அமைச்சராக்க வேண்டும்..' ஐ.பி. செந்தில்குமார்
திண்டுக்கல்: திமுக சார்பில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் பழனி எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாரின் பேச்சு தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த 2019இல் நடைபெற்ற மக்களவை தேர்தல் சமயத்தில் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தவர் உதயநிதி. அதன் பின்னர் அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
அதன் பின்னர் கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிய உதயநிதிக்கு, கடந்த சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின்
இந்தத் தேர்தலில் சுமார் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி மாபெரும் வெற்றி பெற்றார். சேப்பாக்கம் மட்டுமின்றி அந்த சமயத்தில் அவர் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். அந்த சமயத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடங்கப்படாமல் இருப்பதை விமர்சித்து, ஒற்றை கல்லைக் காட்டி பிரசாரம் செய்தது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அமைச்சர்
தேர்தலுக்குப் பின்னர், மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்த திமுக அமைச்சரவையில் உதயநிதிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது, அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களாகவே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அவரது நெருங்கி நண்பரான அமைச்சர் அன்பில் மகேஷ் இதை முன்மொழிய அமைச்சர்கள் மூர்த்தி, செஞ்சி மஸ்தான், எஸ்எஸ் சிவசங்கர் உள்ளிட்ட பலரும் வழிமொழிந்துள்ளனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு பேரூர் திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் மகனும் பழனி எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பலரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கட்சியை வழிநடத்துவார்
கருணாநிதியைத் தொடர்ந்து திமுகவை எப்படி மு.க.ஸ்டாலின் வழி நடத்துகிறாரோ, அதேபோல உதயநிதி ஸ்டாலின் தான் வரும் காலத்தில் திமுகவை வழிநடத்தத் தலைமை ஏற்பார். அதை நாங்கள் கண்டிப்பாக ஏற்போம்" என்று கூறினார்.
-
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
ரூ.354 கோடி சிங்கப்பெண் திட்டம் யாருக்காக? ரோந்து எங்கே? தமிழகத்தை உலுக்கிய 11 சிறுமிகள்.. அக்கிரமம்












Click it and Unblock the Notifications