இன்ஸ்டாகிராம் காதலால் சீரழிந்த சிறுமி.. கோவிலுக்குள் சிறுமியை சிதைத்த டுபாக்கூர் பூசாரி
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலனை பார்க்கச் சென்ற சிறுமியை மிரட்டி அழைத்துச் சென்று கோவில் வளாகத்துக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பூசாரியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா காரணமாக தற்போது ஆன்லைன் வகுப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான நேரங்களில் மாணவர்கள் செல்போன்களிலேயே மூழ்கி கிடக்கின்றனர்.
பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் படிப்பில் கவனமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு கண்டுகொள்வதில்லை. ஆனால் சில நேரங்களில் செல்போன்களில் மூழ்கும் மாணவ மாணவிகள் சமுக வலைதளங்களான ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உலாவி வருகின்றனர். அவ்வாறு உலா வரும் சிறுமிகள் தங்கள் வாழ்வையே தொலைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவதைக் காணமுடிகிறது..

திண்டுக்கல்லில் அதிர்ச்சி
இதுபோன்ற ஒரு நிகழ்ச்வுகள் தற்போது நடைபெற்று பல தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திண்டுக்கல் அருகே இன்டாகிராம் மூலம் பழகிய காதலனை பார்க்கச் சென்ற சிறுமியை மிரட்டி அழைத்துச் சென்று கருவறைக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பூசாரியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தான் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்துள்ளது.

பள்ளி சிறுமி
கொடைக்கானல் அம்பேத்கர்நகர் கல்லுகுழி பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி சிறுமி வீட்டிலிருந்து வழக்கம் போல சென்ற நிலையில், அதன் பிறகு அவர் வீட்டிற்கு செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை இதனைத் தொடந்து , சிறுமியின் தாயார் கொடைக்கானல் காவல் நிலையத்தில் கடந்த 9ஆம்தேதி புகார் கொடுத்துள்ளார் இதனைத் தொடர்து போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

கோவில் வளாகத்தில் பாலியல் தொல்லை
ஆன்லைன் படிப்பின் போது சிறுமி பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை வைத்து தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டனர். அப்போது அந்த சிறுமி நாயுடுபுரத்தை சேர்ந்த பூசாரி ஒருவரிடம் பேசி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த பூசாரியை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிந்தன. ஆன்லைன் வகுப்பின் போது இன்ஸ்டாகிராமில் உலாவிய சிறுமி இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்.

பலியல் வன்கொடுமை
அவரை பார்ப்பதற்காக வீட்டை விட்டு சிறுமி சென்றபோதுதான் கோவில் பூசாரியான ராமசுந்தர், சிறுமியை மிரட்டி அழைத்துச் சென்று தனது கோவில் வளாகத்தில் அடைத்து வைத்துள்ளார். மேலும் சிறுமியை அடைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் தெரிய வந்த நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் டுபாக்கூர் பூசாரியான ராம்சுந்தரை கைது செய்து சிறையின் அடைத்துள்ளனர். சிறுமியை கோவில் வளாகத்தில் அடைத்து வைத்து பூசாரி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications