சுப்பிரமணியபுரம் பட பாணியில் கொடூர கொலை.. கண்ணை மறைத்த காதல்.. திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்டூடியோ உரிமையாளர் கொலை வழக்கில் அவரது மகளின் காதலன் 2 நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார். கண்ணை மறைத்த காதலால் இந்த கொடூர கொலை சம்பவம் சினிமா பாணியில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில் பதின் பருவ காதல் பலரையும் பதம் பார்க்கிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மட்டும் பாதிக்கப்படாமல், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
சில வேளைகளில் காதலர்கள் தற்கொலை செய்கின்றனர். இன்னொருபுறம் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள், சகோதரர்கள் தற்கொலை, கொலை மூலம் பலியாகின்றனர். இந்நிலையில் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் படுகொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

ஸ்டூடியோ உரிமையாளர் படுகொலை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நத்தப்பட்டியில் வசித்து வந்தவர் பாலசுப்பிரமணி (வயது 46). இவர் வேடசந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே ஸ்டூடியோவும் நடத்தி வந்தார். அரிமா சங்கத்தில் துணைத்தலைவராக பொறுப்பு வகித்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி மாயமானார். மறுநாள் தென்னமரத்தோப்பில் பிணமாக கிடந்தார். அவரை யாரோ தீவைத்து எரித்து கொன்றது தெரியவந்தது. கூம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

மூவர் கைது
வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பாலசுப்பிரமணியின் மகளின் காதலன் நண்பர்களுடன் சேர்ந்து அவரை தீர்த்து கட்டி உடலை எரித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஒட்டன்சத்திரம் சின்னகுளிப்பட்டியில் பதுங்கியிருந்த விமல்ராஜ் 20, அவரது நண்பர்கள் சரவணன் 20, அஜித் 19, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி போலீசார் கூறியதாவது:

காதலுக்கு எதிர்ப்பு
பாலசுப்பிரமணியின் மகள் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தனியார் கல்லூரியில் படித்து வரும் விமல்ராஜ் இன்ஸ்டகிராம் மூலம் அவரிடம் பழகினார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த விவகாரம் பாலசுப்பிரமணிக்கு தெரியவந்தது. இதையடுத்து தனது மகளை கண்டித்ததோடு, அவரது செல்போனையும் உடைத்தார். விமல்ராஜையும் நேரில் சந்தித்து காதலை கைவிட வேண்டும். இருவரும் பேசக்கூடாது எனக்கூறி எச்சரிக்கை செய்தார்.

சினிமா பாணியில் கொலை திட்டம்
இது விமல்ராஜை கோபப்படுத்தியது. பாலசுப்பிரமணியை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்கு சின்னகுளிப்பட்டி சரவணன், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த மற்றொரு நண்பர் அஜித், ஆகியோருடன் சேர்ந்து திட்டம் வகுத்தார். கொலைக்கான திட்டத்தை அஜித் சினிமா பாணியில் வகுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

மறைந்திருந்து கொலை
அதன்படி மார்ச் 10ல் அரிமா சங்க கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு பாலசுப்பிரமணி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அங்கு புதரில் மறைந்திருந்த விமல்ராஜ், தனது நண்பர் சரவணனுடன் சேர்ந்து பாலசுப்பிரமணியை தாக்கி, கண்ணில் மிளகாய்பொடி தூவினர். மேலும் கம்பியால் அவரை தொடர்ந்து தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு சென்றனர். தற்போது மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிக்கியது எப்படி
வழக்கு தொடர்பான விசாரணையின்போது போலீசாருக்கு பாலசுப்பிரமணியின் வீட்டில் நடந்த பிரச்சனை பற்றி விபரம் தெரியவந்தது. இதையடுத்து அவரது மகளின் சிம்கார்டுக்கு வந்த செல்போன் எண்களை ஆராய்ந்தனர். அப்போது தான் ஒட்டன்சத்திரம் அருகே சின்னகுளிப்பட்டி கல்லூரி மாணவர் விமல்ராஜ் குறித்த விபரம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி கொலை நடந்த 24 மணிநேரத்தில் மூவரையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications