திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கவர் வாங்கிய "கவுன்சிலர் கணவர்கள்".. தமிழகம் முழுக்க அட்ராசிட்டி - பல்லிளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர‌ கூட்டத்தில் பெண் கவுன்சிலர்கள் கலந்துகொள்ளாத நிலையில் அவர்களின் கணவர்கள் பங்கேற்று தீர்மான புத்தகத்தில் கையெழுத்திட்டு ரூ.2,000 பயணப்படி வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

    கவர் வாங்கிய கவுன்சிலர் கணவர்கள்.. தமிழகம் முழுக்க அட்ராசிட்டி

    திண்டுக்கல் மாவட்டம் பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 15 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், ஒரு மாவட்ட கவுன்சிலர் என 16 பேர் உள்ளனர்.

    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! லோக்கலில் அடிதடி! எடப்பாடிக்காக கைகோர்த்த திண்டுக்கல் துருவங்கள்..! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா! லோக்கலில் அடிதடி! எடப்பாடிக்காக கைகோர்த்த திண்டுக்கல் துருவங்கள்..!

    இவற்றில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக 9 பெண்‌களும்,‌ மாவட்ட கவுன்சிலராக ஒரு பெண்ணும் என மொத்தம் 10 பேர் உள்ளனர்.

    பழனி கவுன்சிலர்கள் கூட்டம்

    பழனி கவுன்சிலர்கள் கூட்டம்

    இந்நிலையில் இன்று ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஈஸ்வரி கருப்புசாமி தலைமையில் பழனி ஊராட்சி‌ ஒன்றிய கவுன்சிலர்கள்‌ கூட்டம் நடைபெற்றது. பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வனிதா பெருமாள், செல்வி அரசு, மகாலட்சுமி செல்வம், முனீஸ்வரி மாரிமுத்து மற்றும் மாவட்ட கவுன்சிலர் நாகலட்சுமி மகுடீஸ்வரன் ஆகிய ஐந்து பெண் கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.

    கவுன்சிலர் கணவர்கள்

    கவுன்சிலர் கணவர்கள்

    அவர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள் வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களை கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்த ஊராட்சி நிர்வாகம், தங்கள் மனைவிகளின் வார்டுகளில் உள்ள பிரச்சனைகளை பேச அனுமதித்தது மட்டுமின்றி, தீர்மான புத்தகத்தில் கையெழுத்திட வைத்து பயணப் படியாக ரூ.2,000 கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதலமைச்சரின் உத்தரவு மீறல்

    முதலமைச்சரின் உத்தரவு மீறல்

    வட்டார வளர்ச்சி அலுவலர், மேலாளர் உட்பட பல அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டும் இதை எப்படி அனுமதித்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. பெண் கவுன்சிலர்களின் பணியில் கணவர்களின் தலையீடு இருக்கக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் தீர்மான புத்தகத்தில் சட்டவிரோதமாக கவுன்சிலர்களின் கணவர்களிடம் கையெழுத்து வாங்கி பயணப்படியை கொடுத்தது சட்டவிரோதமான நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

    பல்லிளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு

    பல்லிளிக்கும் மகளிர் இடஒதுக்கீடு

    உள்ளாட்சியில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்பதற்காக 50% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ்நாடு முழுவதுமே இதேபோல் பெண் கவுன்சிலர்களின் கணவர்களும், உறவினர்களும் அதிகாரத்தை கையில் எடுத்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நகர்புற வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    English summary
    Palani councilor's Husband attended in meeting and get Travel allowance:.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X