ரூட்டை மாற்றிய பிரதமர் மோடி.. வரும்போது ஹெலிகாப்டர்.. போகும்போது கார்.. வேலையை காட்டிய வருண பகவான்!
திண்டுக்கல் : திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக விழாவில் பங்கேற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து மதுரைக்கு காரில் கிளம்பினார்.
சின்னாளபட்டியில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை செல்வதாக இருந்த நிலையில் வானிலை சரியில்லாததால் பிரதமர் மோடி காரில் மதுரை சென்றார்.
மதுரையில் இருந்து விமானப்படை விமானம் மூலம் விசாகபட்டினத்துக்கு செல்ல உள்ளார் பிரதமர் மோடி.

திண்டுக்கல் வந்த மோடி
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஹெலிகாப்டரில்
இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 2 மணிக்கு மதுரை வந்தடைந்தார். பின்னர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் மோடி அவர் கார் மூலம் காந்திகிராமம் பல்கலைக்கழகத்துக்கு வந்தடைந்தார்.

பட்டம் வழங்கிய மோடி
காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். மேலும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார் பிரதமர் மோடி. இந்த விழாவில் விழாவில் பிரதமர் மோடி மாணவ, மாணவிகள் உள்பட 2,314 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

ரூட்டை மாற்றிய பிரதமர்
இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மதுரை கிளம்பினார். அம்பாத்துரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மதுரை செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்த பிரதமர் மோடி சாலை மார்க்கமாக மதுரை புறப்பட்டார்.

காரில் பயணம்
காந்தி கிராம பல்கலைக்கழக விழாவை முடித்துக்கொண்டு காரில் ஏறி மதுரைக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி. செல்லும் வழியில் திரண்டிருந்த பாஜக தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி சென்றார் மோடி. மதுரைக்கு காரில் செல்லும் பிரதமர் மோடி, மதுரையில் இருந்து விமானப்படை விமானம் மூலம் விசாகபட்டினத்துக்குச் செல்ல உள்ளார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications