எங்கள விட்டு போய்டீங்களே! அழுது புரண்ட குடும்பம்! புதைத்தவர் 3வது நாளில் வந்தால் எப்படி இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே உயிரிழந்ததாக கூறி புதைக்கப்பட்ட கூறப்பட்ட நபர், மூன்றாவது நாளில் மீண்டும் வீட்டிற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமுக வலைதளங்களில் பரவிய புகைப்படத்தால் ஏற்பட்ட அலட்சியத்தால் ஒரு குடும்பமே அல்ல ஒரே ஊரே மூன்று நாட்களாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டல் முன்பு கடந்த 17ஆம் தேதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கீழே விழுந்து தலையில் அடிபட்ட நிலையில் கிடந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அடையாளம் தெரியாத நிலையில் இருந்த அவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட இருந்தது.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

இதை அடுத்து மயக்கமடைந்து கிடந்தவர் திண்டுக்கல் பெரியகோட்டை அருகே உள்ள பாறைப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி வயது 65 என்று கூறி அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த அந்த முதியவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் சம்பந்தப்பட்ட முதியவர் பழனிச்சாமி என்று பதிவு செய்தனர்.

உடல் தகனம்

உடல் தகனம்

அவரது குடும்பத்தினரிடம் பிரேத பரிசோதனைக்கு பின் உடலை ஒப்படைத்தனர். குடும்பத்தினரும் உடலைப் பெற்றுக் கொண்டு பாறைபட்டியில் உள்ள சுடுகாட்டில் அனைத்து சடங்குகளையும் செய்து புதைத்தனர். இதனிடையே நேற்று இரவு இறந்ததாக புதைக்கப்பட்ட பழனிச்சாமி வீடு திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பழனிச்சாமி கடந்த சில தினங்களாக வீட்டை விட்டுச் சென்றவர் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பி உள்ளார்.

திரும்பி வந்த முதியவர்

திரும்பி வந்த முதியவர்

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் உயிருடன் திரும்பி வந்த பழனிச்சாமி மற்றும் அவரது உறவினர்களை விசாரணைக்காக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் இறந்ததாக கூறப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தவறு இல்லை

தவறு இல்லை

இந்த சம்பவத்தில் காவல்துறையினர் மீது தவறு இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படத்தை வைத்து அவர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் என பழனிச்சாமியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதை அடுத்து உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது தற்போது மட்டுமல்ல இதற்கு முன்பே பல சம்பவங்கள் இதுபோல நடந்திருந்தாலும் முகச்சிதைவு உள்ளிட்ட காரணங்களால் உடல் மாறி இருக்கலாம். ஆனால் தங்கள் தந்தை தான் எனக் கூறி அவர்கள் உடலை பெற்று சென்ற நிலையில், உண்மையில் இறந்தவர் யார் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+