கார் ரேஸிங்கால் உற்சாகம்! "தேங்க்யூ ஷாலு!" மனைவிக்கு பிளையிங் கிஸ் கொடுத்த அஜித்! வெட்கப்பட்ட ஷாலினி
ஷார்ஜா: துபாயில் நடந்த கார் ரேஸிங்கில் கலந்து கொள்ள என்னை அனுமதித்ததற்கு நன்றி என தனது மனைவி ஷாலினிக்கு நடிகர் அஜித்குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
துபாய் 24 என்ற கார் ரேஸிங்கில் அஜித்தின் அணி 3 ஆவது இடத்தை பிடித்தது. இதற்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில்தான் அஜித் அவ்வாறு தெரிவித்தார். அவர் "Shalu.. Thank you for letting me race" என தெரிவித்திருந்தார். பிளைங் கிஸ்ஸும் கொடுத்தார்.

அப்போது ஷாலினி வெட்கப்பட்டு சிரித்தார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களின் ஷூட்டிங்கை முடித்த அஜித், துபாய் கார் ரேஸிங்கிற்கான பயிற்சியில் இறங்கினார். இதற்காக உடல் எடையை குறைக்கவும் செய்தார். இந்த பயிற்சியின் போது அஜித்தின் கார் பிரேக்கில் கோளாறு ஏற்பட்டு பல முறை விபத்துக்குள்ளானது.
இதனால் அந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அஜித்தின் குழு 992 பிரிவில் கார் ரேஸிங்கில் கலந்து கொண்டது. ஆனால் அவர் சிறிது நேரத்திலேயே மீண்டும் கார் ரேஸிங்கில் கலந்து கொண்டார்.
இந்தநிலையில் இன்று நடந்த 24 எச் கார் ரேஸ் 991 பிரிவில் அஜித்குமார் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3ஆவது இடம் பிடித்தது. இதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியிருப்பதாவது: பிரேக் ஃபெயிலியர் காரணமாக விபத்து ஏற்பட்ட பிறகு என்னா கம்பேக்! 991 பிரிவில் 3ஆவது இடம் மற்றும் ஜிடி 4 பிரிவில் ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் மாதவன் நேரில் போய் அஜித்துக்கு வாழ்த்து கூறினார். நிறைய ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விடாமுயற்சியில் அஜித்துடன் நடித்த ஆரவ், அர்ஜுன் தாஸ் இருவரும் கார் ரேஸை நேரில் கண்டு களித்துள்ளனர்.
கார் ரேஸிங்கில் 3ஆவது இடம் பிடித்ததை அடுத்து கையில் தேசிய கொடியுடன் அஜித் உற்சாகமாக ஓடி வந்தார். அவருக்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தின் போது அஜித், தனது மனைவி ஷாலினிக்கு நன்றி தெரிவித்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அஜித் துபாயில் அளித்த பேட்டியில், 18 வயதில் கார் ரேஸில் பங்கேற்பதை தொடங்கினேன். அதன் பின்னர் சினிமாவில் நடித்ததால் ரேஸில் பங்கேற்கவில்லை.
நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை, அதாவது அக்டோபர் மாதம் வரை சினிமாவில் நடிக்க மாட்டேன். 2010 ஆம் ஆண்டு EUROPEAN 2 என்ற ரேஸில் கலந்து கொண்டேன். அதன் பிறகு என்னால் கார் ரேஸில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. தற்போது கார் ரேஸிங்கில் பங்கேற்பது மட்டுமல்லாமல் ரேஸின் உரிமையாளராகவும் உள்ளேன் என அஜித் குமார் தெரிவித்திருந்தார்.
-
Ajith Mother Passes Away: மூன்று வருடத்திற்குள் பெற்றோரை இழந்த அஜித்.. அம்மா இறந்ததும் வைரலாகும் குடும்ப ரகசியம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications