கோலி மிடில் ஸ்டம்ப்பை தெறிக்கவிட்ட "2கே கிட்".. உறைந்த மைதானம்.. மேட்சில் நடந்தது என்ன? யார் இவர்?
துபாய்: இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையில் நடக்கும் ஆசிய கோப்பை 2022 ஆட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்தது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2022 ஆட்டம் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 ஆட்டம் என்பதால் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து அதிக டார்கெட் கொடுக்க வேண்டும் என்பதால் இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக பேட்டிங் செய்ய முயன்றது.

கோலி அவுட்
ஆனால் பவர் பிளேவிலேயே 6 ரன்கள் எடுத்த நிலையில் கே.எல் ராகுல் அவுட் ஆனார். அதன்பின் இறங்கிய கோலியும் டாட் அவுட் ஆனார். 4 பந்துகள் பிடித்த அவர் தில்ஷன் மதுஷான்கா பந்தில் அவுட்டானார். இளம் வீரர் தில்ஷன் மதுஷான்கா ஓவரில் கோலி போல்ட் ஆனார். இன்னொரு பக்கம் ரோஹித் சர்மா மட்டும் 41 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து அசத்தினார்.

உறைந்த மைதானம்
கோலி விக்கெட்டை தில்ஷன் மதுஷான்கா எடுத்ததும் அதை நம்ப முடியாமல் கோலி திகைத்து போனார். என்னங்க இது இவர் கோலியின் மிடில் ஸ்டம்பையே தெறிக்க வைத்துவிட்டார் என்று எல்லோரும் வியப்பாக பார்த்தனர். மைதானமே உறைந்து போய் தில்ஷன் மதுஷான்காவை பார்த்தது. கோலி பொதுவாக கேட்ச் கொடுத்து அவுட் ஆவார். கவர் டிரைவில் கோட்டை விடுவார். ஆனால் இப்படி போல்ட் ஆனது பலரும் வியப்பை ஏற்படுத்தியது.

யார் இவர்?
இன்று கோலியின் விக்கெட்டை எடுத்த தில்ஷன் மதுஷான்கா ஒரு 2கே கிட் ஆவார். இவருக்கு 21 வயதுதான் ஆகிறது. இன்னும் 12 நாட்களில் இவர் 22 வயதை எட்டுவார். 2020ல் இலங்கையின் அண்டர் 19 அணிக்காக ஆடினார் தில்ஷன். இலங்கை சீனியர் அணி அப்போது மோசமான கால கட்டத்தில் இருந்தது. அப்போது ஜூனியர் அணிக்காக ஆடிய இவர் பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். அதோடு இலங்கை அணியில் எதிர்காலத்தில் கண்டிப்பாக இடம் பிடிப்பார் என்ற நம்பிக்கையை கொடுத்தார்.

5 விக்கெட்
அந்த அண்டர் 19 தொடரில் தில்ஷன் நைஜீரியாவிற்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதன்பின் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடினார். இதையடுத்து அதே 2020 வருடம் டிசம்பர் மாதம் இலங்கை தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடருக்கான சீனியர் டீமில் இவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் ஆடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் இலங்கை - மேற்கு இந்திய தீவுகள் ஒருநாள் தொடருக்கான அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதிலும் இவருக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

வாய்ப்பு
இரண்டு வருடமாக இவருக்கு சீனியர் அணியில் வாய்ப்பு கொடுக்காமல் உட்கார வைத்து இருந்தனர். இந்த நிலையில் இந்த ஆசிய கப் தொடரில்தான் இவருக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதுதான் அவர் முதல்முறை தேசிய இலங்கை அணிக்காக ஆடியது. இந்த நிலையில்தான் இன்று நடந்த போட்டியில் நேராக விராட் கோலி விக்கெட்டையே எடுத்து அசத்தி இருக்கிறார் தில்ஷன் மதுஷான்கா.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications