ப்ப்பா.. டேவிட் வார்னர் அடித்த அந்த சிக்ஸ்! புரியாமல் விழித்த ரசிகர்கள்.. குழம்பி போன வர்ணனையாளர்கள்
துபாய்: ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே, உலக கோப்பையின் 2வது அரையிறுதி போட்டியில் டேவிட் வார்னர் அடித்த ஒரு ஷாட் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் ஆச்சரியமும், சிரிப்பையும் வரவழைத்தது.
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே இன்று துபாயில் டி20 உலக கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்றது.
இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 176 ரன்களை எடுத்தது.

துபாய் மைதானம்
துபாய் மைதானத்தில் பெரிய சைஸ் கொண்டது. எனவே இந்த ரன்கள் ஆஸ்திரேலியாவிற்கு ரொம்பவே சவாலான இலக்குதான். அதிலும் பாகிஸ்தானின் வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசக் கூடியவர்கள் என்பதால் ஆஸ்திரேலியாவிற்கு பெரும் சவால் காத்திருந்தது.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்
இந்த நிலையில்தான், ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் அவர் சந்தித்த முதல் பந்தில் டக்அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். சற்று அதிரடி காட்டிய மிட்சேல் மார்ஷ், 22 பந்துகளில் 28 ரன்கள் அடித்து விட்டு அவுட்டாகிவிட்டார். பார்மில் இல்லாத ஸ்டீவ் ஸ்மித் வார்னருக்கு எதிர் முனையில் இருந்தார்.

ஹபீஸ் பந்து வீச்சு
அப்போதுதான், 8வது ஓவரை வீச ஹபீஸ் வந்தார். ஆப் ஸ்பின் பவுலரான அவரின் முதல் பந்தை வார்னர் எதிர்கொண்டார். ஹபீஸ் அடிக்கடி பந்து போடக் கூடியவர் இல்லை. முன்னணி பவுலர்களை கடைசி கட்டத்தில் பயன்படுத்துவதற்காக ஹபீசை பந்து வீச கொண்டு வந்தார் பாகிஸ்தான் கேப்டன் பாபர். இதனால் தடுமாற்றத்தோடு ஹபீஸ் பந்து வீசினார்.

2 பிட்ச் பந்து
ஓவரின் முதல் பந்தை அவர் வீச முயன்றபோது கையை விட்டு வழுக்கிவிட்டுச் சென்றது. அந்த பந்து 2 பிட்ச் ஆகி லெக் சைடுக்கு போனது. அதாவது நம்மூரில் தெருவில் கிரிக்கெட் ஆடும்போது சிலர் இப்படியான பந்துகளை வீசுவதை பார்த்திருப்பீர்களே, அப்படியான ஒரு மொக்கை பந்து அது. பொதுவாக தெருமுனை கிரிக்கெட்டில் இது, டெட் பால் என்று அழைக்கப்படும்.

தமிழ் கமெண்டரி குழப்பம்
தமிழ் கமெண்டரி செய்தவர்கள் கூட, இது டெட் பால் என்று கூறினர். அதாவது அந்த பந்து கணக்கிலேயே வராது. ஒரு பிட்ச்சாகி போனால் மட்டும்தான் பந்து கணக்கில் வரும் என்பது அவர்கள் வாதம். ஆனால் வார்னர் கிரீசை விட்டு இறங்கி வந்தார். அந்த பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் பிரமாண்ட சிக்சராக அடித்தார். இது டெட் பாலாச்சே. விளையாட்டுக்கு இப்படி வார்னர் அடித்தாரா, என்றெல்லாம் கமெண்டரியில் பேசினர். ஆனால் நடுவர் அதற்கு சிக்ஸ் கொடுத்தார். மேலும் அதை நோ பால் என்று அறிவித்தார்.

நோ பால் சிக்ஸ்
இதில்தான் விஷயம் இருக்கிறது. இரண்டு பிட்ச்சாகி வரும் பந்து, கிரிக்கெட் விதிமுறைப்படி நோ பால்தான். அதற்கு ஃப்ரீ ஹிட்டும் உண்டு. அதை வார்னர் உணர்ந்து சமயோஜிதமாக கிடைத்த சான்சை பயன்படுத்தி சிக்சர் விளாசிவிட்டார். ஆனால் தமிழ் கமெண்டரியில் இருந்தவர்களுக்கு கூட முதலில் இந்த ரூல் தெரியவில்லை என்பது சற்று அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தது. இத்தனைக்கும் கமெண்டரி செய்வோருக்கு கிரிக்கெட் அறிவு மற்றவர்களை விடவும் அதிகம் இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழ் கமெண்டரியில் இருந்தவர்கள், இதை டெட் பால் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இதுபோன்ற பந்தை சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் பார்த்திராத ரசிகர்களும், இந்த சிக்சரை பார்த்து ஆச்சரியப்பட்டனர். சமூக வலைத்தளங்கள் முழுக்க இந்த சிக்சர் பற்றிதான் பேச்சாக உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications