சிபிஎஸ்இ 10 & 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு.. மத்திய கிழக்கு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு
துபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் அங்குள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று வருகிறார்கள். இப்போது அங்கு கமேனி மரணத்தைத் தொடர்ந்து பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், நாளை நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்தியாவில் மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்இ, நமது நாட்டை தாண்டிலும் கூட சில நாடுகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக மத்திய கிழக்கில், அதாவது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் உள்ள பல பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. அங்குள்ள இந்திய மாணவர்களே சிபிஎஸ்இ பாடத்தைப் பயில்கிறார்கள்.

தேர்வு ஒத்திவைப்பு
அங்கும் தேர்வு குறித்த அட்டவணைகளை சிபிஎஸ்இ அமைப்பு வெளியிடும். இதற்கிடையே நாளை மார்ச் 2ம் தேதி பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய மையங்களில் தேர்வுகள் நடைபெற இருந்தது. இருப்பினும், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளை சிபிஎஸ்இ அமைப்பு இப்போது ஒத்திவைத்துள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்த ஏவுகணைப் பதிலடிகள் காரணமாக அங்குப் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வான்வெளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், குண்டுவெடிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியக் குழந்தைகள்
இந்தத் திடீர் முடிவால், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பல ஆயிரம் குழந்தைகள் உட்படப் பாதிக்கப்பட்டுள்ளனர். துபாய் முதல் தோஹா வரையிலான சர்வதேசப் பள்ளிகளில் படிக்கும் இந்தியப் புலம்பெயர் மாணவர்கள் இதனால் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.. கல்லூரிச் சேர்க்கைக்கு மிகவும் முக்கியமான இந்தத் தேர்வுகள் எப்போது நடக்கும் என்றே தெரியாத சூழல் நிலவுகிறது.. மேலும், அங்கு சில பகுதிகள் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளன.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் போர் அபாயம் அதிகரித்துள்ளது. ஈரானின் புரட்சிகரப் படை பெரிய தாக்குதல்கள் நடத்துவோம் என அச்சுறுத்தியுள்ளது. மறுபுறம் அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத பதிலடி குறித்து எச்சரித்ததால் உலகப் பொருளாதாரங்கள் ஸ்தம்பித்துள்ளன. ஏற்கனவே இதனால் கச்சா எண்ணெய் விலைகள் விண்ணை எட்டியுள்ளன.
இந்தியர்கள்
சுமார் 1.8 கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நிலையில், அவர்கள் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தன. ஆனால் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற பகுதிகளில் அதிகரித்துவரும் குண்டுவெடிப்புகள் காரணமாகப் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் தான் CBSE தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய தேதிகள்
நிலைமை சீரானவுடன் தேர்வுகள் நடத்தப்படும் எனத் தெரிகிறது. அதேநேரம் இதுவரை புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்படவில்லை. புதிய தேர்வுத் தேதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் எனத் தெரிகிறது.. மாணவர்கள் அமைதியாக இருக்கும்படியும் புதிய தகவல்களைக் கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications