கொரோனா.. இரவில் மட்டும் ஊரடங்கு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிரடி கட்டுப்பாடு!
கொரோனா வைரஸ் காரணமாக இன்று இரவில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இரவு நேரத்தில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி:கொரோனா வைரஸ் உலகம் முழுக்க எப்படி பரவி வருகிறதோ அதேபோல் தற்போது மத்திய கிழக்கு நாடுகளிலும் தீவிரம் அடைந்துள்ளது. இந்த வைரஸ் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு கொரோனா காரணமாக 333 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video
அங்கு கொரோனா பாதிப்பு தீவிரம் அடைய வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அங்கு மக்கள் பொது இடங்களில் செல்ல நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சாலையில் மக்கள் கூட்டமாக செல்வதும், அதிக வாகனங்கள் செல்வதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதை அங்கு போலீசார் மிக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஆனால் அமீரகத்தில் அதிகாரப்பூர்வமாக ஊரடங்கு அமலில் இல்லை.
இந்த நிலையில் இன்று இரவில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இரவு நேரத்தில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அங்கு நாடு முழுக்க சுத்தப்படுத்தும் பணிகள் நடத்தப்பட உள்ளது.
அனைத்து பொது இடங்கள், டிராம்கள், ரயில்கள் எல்லாம் சுத்தப்படுத்தப்பட உள்ளது. அதன்படி இன்று முதல் ஞாயிறு வரை தினமும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றில் இருந்து இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.
இதில் மக்கள் யாரும் வெளியே வர கூடாது. மெட்ரோ ரயில்கள், டிராம்கள் இயங்காது. ஆனால் தனியார் வாகனங்கள், டாக்சிகள், மற்ற வாகனங்கள் இந்த நேரத்தில் இயங்கலாம். இந்த விதிகளை மீறும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள், அபராதங்கள் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications