• search
துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மச்சம்" உடம்பெல்லாம்.. சார் யார் தெரியுமா?.. மொத்தம் 53 "அழகிகளாம்".. மிரள வைக்கும் வெறித்தனம்!

Google Oneindia Tamil News

துபாய்: சவுதி அரேபியாவை சேர்ந்த அப்துல்லா என்பவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் எல்லாம் வாயை பிளந்து வருகிறார்கள்.. என்னவா இருக்கும்?

சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து இளைஞர் பற்றி ஒரு செய்தி வெளியானது.. அவர் பெயர் ஓங் டாங் சோரூட்.. இவர் ஒரு டாட்டூ கலைஞர்.. இவருக்கு மொத்தம் 8 மனைவிகள் இருக்கிறார்கள்.

8 பேரும் ஒரே வீட்டில் எந்தவித சண்டை சச்சரவும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.. காரணம், அத்தனை மனைவிகளையும் சோரூட் தீவிரமாக காதலிக்கிறார்...

விரைவில் இந்தியாவுக்கு வாங்க.. சவுதி பட்டத்து இளவரசருக்கு பிரதமர் மோடி அழைப்பு கடிதம் விரைவில் இந்தியாவுக்கு வாங்க.. சவுதி பட்டத்து இளவரசருக்கு பிரதமர் மோடி அழைப்பு கடிதம்

 8 மனைவிகள்

8 மனைவிகள்

தன்னுடைய மனைவிகள் ஒவ்வொருவரை பற்றியும் சோரூட் பூரித்து சொன்னார்.. அவர்களை எப்படி, எங்கே முதல்முதலாக சந்தித்தார், எப்படி காதலை சொன்னார், அந்த காதல் எப்படி ஒர்க் அவுட் ஆனது என்பது குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு பகிர்ந்து கொண்டிருந்தார்.. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில் சந்தித்துள்ளார்.. அவர்களை விரும்பி உள்ளார்.. பிறகு காதலை வெளிப்படுத்தி, திருமணமும் செய்து கொண்டுள்ளார்.

"வேட்டையாடு விளையாடு"

"வேட்டையாடு விளையாடு" படத்தில் கமல், டக்கென லவ்வை சொல்லுவாரே, அதுமாதிரியே, ஒரு கல்யாணத்திலேயே, ஆன் தி ஸ்பாட்டில் லவ் சொல்லி உள்ளார்.. கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாராம்.. அந்த பெண்ணும் ஓகே சொன்னாராம்.. அன்றைய தினமே கல்யாணமும் நடந்து முடிந்துவிட்டதாம்.. இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், இந்த 8 பெண்களிடமும் பிரிவினை காட்ட மாட்டாராம்.. அதேபோல, 8 பெண்களுக்குள்ளும் சண்டைகள் வந்ததே கிடையாதாம்..

 8 மனைவி + 8 பெண்கள்

8 மனைவி + 8 பெண்கள்

இந்த மனைவிகள் ஆளுக்கு ஒரு பக்கம் வேலைக்கு போகிறார்கள்.. கைநிறைய சம்பாதிக்கிறார்கள்.. சாயங்காலம் வீட்டுக்கு வந்து ஜாலியாக இருக்கிறார்களாம்.. அதெல்லாம் சரி, இரவு படுக்கையை எப்படி பகிர்ந்து கொள்வீர்கள் என்று கேட்டால், பிளான் செய்து கொள்வார்களாம்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் சோரூட்டுடன் படுத்து கொள்வாராம்.. 8 பேரில் ஒருவர், சோரூட்டுடன் படுக்கையை பகிரும்போது, மற்ற 7 மனைவிகளும் வேறு ஒரு ரூமில் படுத்துக்கொள்வார்களாம்... இதையெல்லாம் கேள்விப்பட்டு, "வாழ்ந்தால் நம்ம சோரூட் போல வாழணும்" என்று 80 கிட்ஸ்களின் காதில் அன்று புகை வந்ததை மறுக்க முடியாது.

 53 மனைவிகள்

53 மனைவிகள்

ஆனால், சோரூட்டையும் ஒருவர் மிஞ்சிவிட்டார்.. அவர் பெயர் அபு அப்துல்லா.. 63 வயதாகிறது.. சவுதி அரேபியாவை சேர்ந்தவர்.. இவருக்கு மொத்தம் 53 மனைவிகள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறது.. நம்பித்தான் ஆகணும்.. வேற வழியில்லை.. ஏனென்றால், அப்துல்லாவே அதை பற்றி சொல்லுகிறார், கேளுங்கள்.

டைவர்ஸ்

டைவர்ஸ்

"முதன்முதலில் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன்.. நாங்கள் இருவரும் சந்தோஷமாகவே வாழ்க்கையை தொடங்கினோம்.. ஆனால், திடீரென எங்களுக்குள் மனஸ்தாபம் வந்துவிட்டது.. தொடர்ந்து தகராறு, மனவருத்தம் போன்றவை இருந்ததால், அதிலிருந்து விடுபட நான் 2வது பெண்ணை திருமணம் கொண்டேன்.. முதல்மனைவியால் எனக்கு மனரீதியான பாதிப்புக்கு, இந்த 2வது மனைவி மருந்தாக பயன்பட்டார்.. ஆனால் 2வது மனைவியுடனும் கருத்து வேறுபாடு வந்துவிட்டது.. முதல் மனைவிக்கும், 2வது மனைவிக்கும் ஒத்துப்போகவில்லை.. அதனால், இந்த 2 மனைவிகளுடன் ஏற்பட்ட பிரச்சனைகளை மறக்க, 3வது திருமணம் செய்து கொண்டேன்..

 ஸ்திரத்தன்மை

ஸ்திரத்தன்மை

இப்படியே ஒவ்வொரு மனைவியையும் விவாகரத்து செய்துவிட்டு, மொத்தம் 53 கல்யாணம் வரை செய்துகொண்டேன்.. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, உடல் சுகத்துக்காக நான் இத்தனை திருமணங்களை செய்து கொள்ளவில்லை.. மனரீதியாக நான் நிம்மதியாக இருக்கணும்.. மனம் ஸ்திரத்தன்மையுடன் இருக்கணும், சந்தோஷமாக இருக்கணும் என்பதற்காகவே நான் திருமணம் செய்து கொண்டேன்.. அதிலும் வயது முதிர்ந்த பெண்ணை திருமணம் செய்வதன் மூலம் ஸ்திரத்தன்மை உருவாகிறது.. நான் மணம் முடித்த அத்தனை பெண்களும் பேரழகு" என்கிறார் அப்துல்லா.

 ஜாலி

ஜாலி

அதாவது, அப்துல்லா கல்யாணம் செய்த எல்லா மனைவிகளுடனும் தகராறு வந்துள்ளது.. அதேசமயம், எந்த பிரச்சனையும் மனைவியுடன் பேசி தீர்த்து கொள்ள அப்துல்லா விரும்பவில்லை என தெரிகிறது.. சண்டையில் இருந்து எஸ்கேப் ஆகிவிட வேண்டும், மனநிம்மதியுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, அடுத்தடுத்து இவர் திருமணம் செய்வதாக கூறியுள்ளது வியப்பை தந்து வருகிறது.. 20 வயதில் முதல் கல்யாணம் அப்துல்லாவுக்கு நடந்துள்ளது.. 23 வயதிலேயே 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார்..

ஹைலைட்

ஹைலைட்

அனைத்து திருமணங்களையும் பாரம்பரிய முறைப்படி செய்துள்ளார்.. பெரும்பாலும் சவுதிலேயே இந்த கல்யாணங்கள் நடந்துள்ளன.. இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், ஒருநாள் வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு போனாராம்.. அங்கேயே ஒரு வெளிநாட்டு பெண்ணை பார்த்து பிடித்துபோய், உடனே அவரையும் கல்யாணம் செய்து கொண்டாராம்.. இப்போது விஷயம் என்னவென்றால், இனிமேல் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தற்போது முடிவெடுத்துவிட்டாராம் "மாப்பிள்ளை" அப்துல்லா..!

English summary
Do you know, 63 year old Saudi man Married 53 women, What Was the Reason
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X