துபாய் பயணி வாயில் 82 கிராம் தங்கம்.. ஆடிப்போன பெங்களூரு அதிகாரி.. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா
துபாய்: துபாயில் இருந்து தங்கம் கடத்த பலரும் பலே ஐடியாக்களுடன் வருவது வழக்கம்தான். ஆனால், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பயணி செய்த காரியத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.. "வாய் பேசாமல் இருந்தாலே போதும், எல்லாம் ஸ்மூத்தமாக போய்விடும்" என்று நினைத்தாரோ என்னவோ, அப்படியே தன் வாய்க்குள்ளேயே தங்கத்தை கட்டிக் கொண்டு வந்து, வசமாக மாட்டிக் கொண்டுள்ளார் ஒரு புத்திசாலிப் பயணி.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
துபாயில் இருந்து இண்டிகோ விமானத்தில் (பயண எண்: 6E-1486) பெங்களூரு ஏர்போர்ட்டின் 2-வது முனையத்திற்கு வந்திறங்கினார் முகமது சிராஜ்... இவர் துபாயிலிருந்து கிளம்பும்போதே செம பிளானுடன் தான் வந்துள்ளார்.

துபாயில் இருந்து தங்கம்
அதாவது, அங்கிருந்து பெங்களூரு வந்துவிட்டு, அப்படியே அடுத்த ஃபிளைட்டில் காசியாபாத் பறந்துவிட வேண்டும் என்பதுதான் அவரது மாஸான திட்டம். ஆனால் விதி வேறு மாதிரி அல்லவா கணக்குப் போட்டு வைத்து விட்டது.
ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி பணியில் இருந்த CISF அதிகாரிகள், பயணிகள் அனைவரிடமும் வழக்கமான விசாரணை மேற்கொண்டனர்.. அதேபோல சிராஜிடம் விசாரித்தனர். ஆனால், சிராஜால் சரியாக பேச முடியவில்லை.. ஏதோவொரு அசவுகரியத்துடன் தவித்தார்..
பெங்களூரு ஏர்போர்ட்
அவரது நடவடிக்கைகளும் கொஞ்சம் சந்தேகத்திற்குரியதாக இருந்துள்ளது. உடனே பாதுகாப்புப் படையினருக்கு டவுட் எகிறியது.. சும்மா விடுவார்களா அதிகாரிகள்? உடனடியாக அவரைதடுத்து நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினார்கள்..
அப்போதுதான் சிராஜின் உடலை கண்டு அதிர்ந்தனர்.. ஸ்கேனர்கள் மற்றும் செக்கப்புகளிலிருந்து தப்புவதற்காக, சுமார் 82 கிராம் எடையுள்ள தங்க துகள்களை 2 சின்ன கேப்சூல் வடிவ பாக்கெட்டுகளாக மாற்றித் தன்னுடைய வாய்க்குள் ரகசியமாக பதுக்கி வைத்திருந்தார் சிராஜ்.. அந்த 2 குட்டி கேப்சூல்களும் சுண்டு விரல் அளவுக்குக்கூட இல்லையாம்.. ஆனாலும், வசமாக தங்க கேப்சூல் தங்கத்துடன் சிக்கிவிட்டார் சிராஜ்..
மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு, மேலதிக சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்காக விமான நிலைய காவல் துறையினரிடம் சிராஜ் ஒப்படைக்கப்பட்டார்.. இந்த கடத்தல்களுக்கு பின்னாலுள்ள நெட்வொர்க் என்ன? மூளையாக செயல்படுவது யார்? யாருக்காக தங்கத்தை சிராஜ் கடத்தி வந்தார்? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக துப்பு துலக்கி கொண்டிருக்கிறார்கள்.
82 கிராம் தங்கம்
இப்படித்தான் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதியும், இதே ஏர்போர்ட்டில் பேங்காக்கிலிருந்து வந்த 2 பேர் சுமார் 260 கிராம் தூள் தங்கத்துடன் சிக்கினார்கள்.. வெளிநாடுகளிலிருந்து தங்கத்தைக் கொண்டு வருவதும், ஒரே நாளில் இன்னொரு ஃபிளைட்டில் வேறு ஊருக்கு தப்பிச் செல்வதும் இப்போது ஃபேஷனாகவே மாறிவிட்டது போல..
அதுபோல நினைத்து வந்த சிராஜ், இப்போது ஜெயிலில் உள்ளார்.. வாய்க்குள் தங்கத்தை மறைத்து வைத்து மாட்டிக் கொண்ட இந்தச் சம்பவம் சோஷியல் மீடியாவிலும் பரவி கொண்டிருக்கிறது..!!
எனினும், துபாயிலிருந்து இந்தியாவுக்குத் தங்கம் கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.. இதற்கு அங்குள்ள தங்கத்தின் விலை மற்றும் வரி குறைவு போன்ற பொருளாதாரக் காரணங்களே முக்கிய பின்னணியாக அமைகின்றன..
தங்கம் கடத்தல் ஏன்
துபாய் ஒரு முக்கிய சர்வதேச வர்த்தக மையமாக விளங்குவதால் அங்கிருந்து எளிதில் தங்கம் கிடைக்கும் சூழல் இருப்பதால், பாதுகாப்புப் படையினரின் நவீன ஸ்கேனர்கள் மற்றும் சோதனைகளை ஏமாற்றித் தப்பிக்க கேப்சூல் வடிவில் வாய்க்குள் மறைப்பது, உடல் உறுப்புகளில் ஒடுவது போன்ற பல்வேறு விபரீத மற்றும் நூதன முறைகளைக் கடத்தல்காரர்கள் கையாண்டு வருகிறார்கள்..
இருந்தாலும், நாட்டின் பல்வேறு விமான நிலையங்களிலும் சுங்கத்துறை மற்றும் மத்திய தொழில பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு, எப்பேர்ப்பட்ட மாஸ்டர் மைண்ட் கடத்தல்காரர்களையும் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்துவிடுகிறார்கள்...!!


Click it and Unblock the Notifications
