வார்னிங் தரும் பிட்ச்.. இந்திய அணி இதை மட்டும் செய்தால் போதும்.. கண்டிப்பாக வெற்றிதான்.. ஆனால்!
துபாய்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வெல்லும் அணி மேட்ச் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை டி 20 லீக் ஆட்டம் இன்று நடக்க உள்ளது. இரண்டு அணிகளுக்குமே இது முக்கியமான ஆட்டமாக இருக்க போகிறது. இரண்டு அணிகளும் பாகிஸ்தானுடன் தோல்வி அடைந்துவிட்டது.
உலகக் கோப்பை டி 20 போட்டியில் செமி பைனல் செல்ல வேண்டும் என்றால், குழு ஆட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும். இந்த நிலையில்தான் இன்று நடக்கும் போட்டியில் இந்தியா கண்டிப்பாக வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கட்டாயம்
இந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் 2 போட்டிகளை தவிர மற்ற அனைத்து போட்டிகளும் சேஸிங் செய்யும் அணிதான் வெற்றிபெற்று இருக்கிறது. ஸ்காட்லாந்து போட்டியில் ஆப்கானிஸ்தான், வங்கதேச போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் ஆகிய அணிகள் மட்டும் முதலில் பேட்டிங் செய்து வென்றுள்ளது. மற்றபடி எல்லா அணிகளும் சேசிங் செய்து வென்றுள்ளது.

துபாய்
இதே துபாயில்தான் இந்தியா முதலில் பேட்டிங் செய்து தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இன்றும் டாஸ் வெல்லும் அணி சேசிங்தான் தேர்வு செய்ய வேண்டும். இரண்டாவது இன்னிங்ஸ் பனிப்பொழிவு காரணமாக பந்து ஈரமாகி ஸ்விங் செய்ய கஷ்டமாகும். அதேபோல் பவுலர்கள் யார்க்கர், ஸ்பின் பவுலிங் செய்வது கடினமாக இருக்கும். முதலில் பவுலிங் செய்யும் பட்சத்தில் இந்தியா பவுலிங் செய்வதே சரியான முடிவாக இருக்கும்.

பிட்ச்
இதனால் இன்று டாஸ் வெல்லும் அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்திய அணி டாஸ் வென்றால் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இந்தியா டாஸ் மட்டும் வெல்ல வேண்டும். இதுவரை டி 20 போட்டிகளில் 16 ஆட்டங்களில் இரண்டு அணிகளும் ஆடி உள்ளன. இதில் 8 போட்டிகளில் இந்தியாவும், 8 போட்டிகளில் நியூசிலாந்து வென்றுள்ளது. ஐசிசி போட்டிகளில் கடந்த 18 வருடமாக இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தவே இல்லை.

ஆடும் இந்திய அணி வாய்ப்பு
இந்திய அணியில் இன்று ராகுல், ரோஹித் சர்மா, கோலி, சூர்ய குமார் யாதவ், பண்ட், பாண்டியா, ஜடேஜா, ஷரத்துல் தாக்கூர், ஷமி, வருண் சக்ரவர்த்தி, பும்ரா ஆகியோர் ஆட வாய்ப்புகள் உள்ளன. பாண்டியா கண்டிப்பாக ஆடுவார் என்று கூறப்படுகிறது. ஷரத்துல் தாக்கூர் , புவனேஷ்வர் குமாரில் ஒருவர் ஆட அதிக வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications