முழுவதும் உள்நாட்டு தயாரிப்பு.. விபத்தில் சிக்காத தேஜஸ்.. துபாயில் விழுந்து நொறுங்கியது ஏன்?
அபுதாபி: துபாய் விமான கண்காட்சியில் இந்திய போர் விமானமான தேஜஸ் விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் விமானி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக பெரிய அளவில் இந்த விமானம் விபத்தில் சிக்கவில்லை. அப்படி இருக்கையில் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று கேள்வி எழுந்திருக்கிறது.
துபாய் விமான கண்காட்சியின் வான்வழி சாகசத்தில் ஈடுபட்டிருந்த தேஜஸ் போர் விமானம், செங்குத்தாக கீழ் நோக்கி பாய்ந்து, கட்டுப்பாட்டை இழந்து வெடித்து சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்த இந்திய விமானப்படை விசாரணையை தொடங்க இருக்கிறது.

தேஜஸ் விமானம் லைட் காம்பேக்ட் வகை விமானமாகும். இதன் வடிவமைப்பு, அசெம்பிள் என அனைத்தும் உள்நாட்டிலேயே செய்யப்படுகிறது. என்ஜின் மட்டும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த விமானத்தை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் மற்றும் டெவலப்மென்ட் ஏஜென்சி இணைத்து தயாரித்திருக்கிறது. இதில் ஒரே ஒரு இருக்கைதான் இருக்கும். அதேபோல என்ஜினும் ஒன்றுதான். விமானப்படை மட்டுமல்லாது கடற்படையிலும் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2001ம் ஆண்டு முதல்முதலாக தேஜஸ் விமானம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு 2016ல் முழுமையாக விமானப்படை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது முதல் இப்போது வரை ஒரே ஒருமுறை மட்டுமே இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜஸ்தான் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விமானம் விழுந்து நொறுங்கியது. விமானி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
இப்படியாக இந்த விமானத்தின் மீது பிளாக் மார்க் ஏதும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் துபாயில் விபத்தில் சிகியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விமான கட்டுப்பாட்டு அமைப்பில் மின்னணு அல்லது சாஃப்வேரில் கோளாறு ஏற்பட்டு அது Fly by wire அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது. ராஜஸ்தான் விபத்திலும் இதுதான் நடந்தது. விமானத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதுதான் இந்த Fly by wire அமைப்பு. இதில் பழுது ஏற்பட்டால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகம்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications