பேட்டிங் பார்மில் இல்லாதவரை எப்படி கேப்டனாக்கலாம்?.. ரஹானேவுக்கு எதிராக பொங்கிய முன்னாள் வீரர்!
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பையில் இந்தியா படுதோல்வி அடைந்து தாயகம் திரும்பியது. இதனை தொடர்ந்து இந்தியாநியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது.
பிரதமர் மோடியின் ஜஸ்ட் 4 மணி நேர விசிட்..! ரூ.23 கோடி செலவிடும் மாநில அரசு!
3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும், நியூசிலாந்தும் களம் காண்கின்றன. உலககோப்பையில் ஏமாற்றம் கிடைத்த நிலையில் இந்த தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

புதுமுகங்களுக்கும் வாய்ப்பு
டி20 தொடரில் புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பழைய வீரர்களை ஓரம்கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்ட புதுமுகங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ரஹானே கேப்டன்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரஹானே கேப்டனாக நியமித்து இந்திய கிரிக்கெட் வாரியம்(பி.சி.சி.ஐ) சமீபத்தில் அறிவித்தது. முதல் டெஸ்ட்டில் ஓய்வு எடுக்கும் கோலி 2-வது டெஸ்ட்டில் அணிக்கு திரும்பி விடுவார். அவர் வழக்கம்போல் 2-வது டெஸ்டில் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ரஹானே பார்மில் இல்லை
கே.எஸ் பாரத், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் புதுமுகமாக டெஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பேட்டிங்கில் பார்மில் இல்லாத ரஹானேவை டெஸ்டில் கேப்டனாக்கியது தவறு என்று இந்தியா முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:- சமீபத்தில் நடந்த பல டெஸ்ட் போட்டிகளில் ரஹானே பேட்டிங் பார்மில் இல்லை. எப்படி அவரை கேப்டனாக நியமித்தார்கள்.

உண்மையை பேச வேண்டியதுள்ளது
ரஹானேவை எனக்கும் பிடிக்கும். ஆனால் இந்த இடத்தில் உண்மையை நேர்மையாகப் பேச வேண்டியதுள்ளது. இங்கிலாந்து எதிரான கடைசி டெஸ்ட் நடந்திருந்தால் அதில் ரஹானே இடம்பெறுவது சிக்கலாக கூட இருந்திருக்கும். ஏனெனில் கடந்த 2 ஆண்டுகளாக அவரின் பேட்டிங் சராசரி படிப்படியாகச் சரிந்து, 20 புள்ளிகளாக வந்துவிட்டது. லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் அரைசதம் அடித்திருக்காவிட்டால் அவர் அணியில் இருந்து கண்டிப்பாக நீக்கப்பட்டிருப்பார்.

மிகப்பெரிய வருத்தம்
பார்மில்லாமல் தவிக்கும் ரஹானேவை கேப்டனாக நியமித்தது எனக்கு மிகப்பெரிய வருத்தம்தான். ஆனால் அணி நிர்வாகம் இப்போது கொடுத்துள்ள நம்பிக்கையை ரஹானே ரன்கள் அடித்து காப்பாற்ற வேண்டும். நியூஸிலாந்து தொடர் ரஹானேவின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானது. இதை உணர்ந்து அவர் செயல்பட வேண்டும். இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.