முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள்.. அமீரக திமுக சார்பாக இன்று 5ம் ஆண்டு நினைவேந்தல்
துபாய்: அமீரக திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று துபாயில் நடத்தப்படுகிறது.
திமுக முன்னாள் தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி இயற்கை எய்தினார். இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது.

இதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள். தமிழ்நாடு முழுக்க அவரை நினைவு கூர்ந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் நாள் திருக்குவளையில் பிறந்த கருணாநிதி, இந்திய அரசியலில் காணாத உயரங்களும்.. செய்யாத சாதனைகளும் இல்லை! இளம் வயதில் இருந்தே தமிழ் மீது தீராத பற்றும், காதலும் கொண்டிருந்த கருணாநிதி, பள்ளி காலத்திலேயே நாடகம்.. கதை.. கவிதை.. இலக்கியம் என்று பல துறைகளில் சிறந்து விளங்கினார். தன்னுடைய எதிர்காலத்தையும் அதற்கு ஏற்றபடியே கருணாநிதி அமைத்துக்கொண்டார்.
இந்திய அரசியலில் எவரும் படைக்காத பல சாதனைகளை படைத்தவர் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி. 1957ல் திமுக போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே குளித்தலையில் இருந்து எம்.எல்.ஏ., வாக தேர்வானார். அதன்பின், 1960-ஆம் ஆண்டில் தி.மு.க.வின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1967ல் திமுக ஆட்சிக்கு வந்து அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்றார். அண்ணாவின் மறைவால் 1969ல் கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார். 1957ல் எம்.எல்.ஏ., ஆன கருணாநிதி, அதன்பின் ஒரு எம்.எல்.ஏ., தேர்தலில் கூட தோல்வி அடைந்தது இல்லை. இந்தியாவில் இந்தச் சாதனையை எந்த அரசியல் தலைவரும் படைத்ததே இல்லை.
அமீரக திமுக: இந்த நிலையில் அமீரக திமுக சார்பாக கருணாநிதியின் 5 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று துபாயில் நடைபெறுகிறது. இன்று இரவு 7.30 மணியளவில், துபாயில் உள்ள லேண்ட் மார்க் ஹோட்டல், பனியாஸ் ஸ்கொயர் இடத்தில் இந்த 5 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
அமீரக தி.மு.க அமைப்பாளர் S.S.மீரான் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. திமுக நிர்வாகிகள், அரபு வாழ் திமுக தொண்டர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை நினைவு கூறும் விதமாக இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ!












Click it and Unblock the Notifications