ஹலோ ஹேட்டர்ஸ்.. சிஎஸ்கே வெளியேறல.. வெறியேற்றியது.. தெறிக்கும் தோனி மீம்ஸ்
துபாய்: சார்ஜாவில் தோனி அடித்த சிக்ஸ் பற்றிதான் உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் பேசியும், சிலாகித்துக் கொண்டும் உள்ளனர்.
இப்போதுள்ள கிரிக்கெட் உலகைச் சேர்ந்த, எத்தனை பேர் சிக்சர் அடித்தாலும், தோனி அடிக்கும் ஒற்றை சிக்சருக்கு ஈடாகாது. அந்த சிக்சருக்கு மட்டும் 12 ரன்கள் கூட கொடுக்கலாம். அப்படி ஒரு அழகு, பவர், மற்றும் இமாலய உயரம் அதில் இருக்கும்.
நேற்றும் இப்படித்தான், தோனி வெற்றிக்கு தேவையான ரன்னை இமாலய சிக்சருடன் எட்ட வைத்தார். இதுதான் தோனி ஸ்டைல். முன்பு இப்படித்தான் அவர் இருந்தார். வெற்றிக்கு தேவையான ரன்களை சிங்கிள் ஓடி எடுப்பவர், வெறும் பிளேயர்.. ஆனால், அதையே, சிக்சர் அடித்து வெற்றி பெற வைப்பவரே மான்ஸ்டர். தோனி அப்படியான ஒரு மான்ஸ்டர்!
இந்த மான்ஸ்டர் அவதாரத்தை வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பார்த்தனர் ரசிகர்கள். எனவே சமூக வலைத்தளங்கள் முழுக்க அதுபற்றிய மீம்ஸ்கள் தெறிக்கவிடப்படுகின்றன. இதோ சூப்பரான சூடான சில மீம்ஸ் உங்கள் பார்வைக்கு.

சிஎஸ்கேவை எதிர்கொள்வது மட்டுமே இலக்கு
அப்பா.. ஐபிஎல்னா என்ன.. என்று தோனி மகள், ஷிவா கேட்பதை போலவும், 7 அணிகள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டு, சிஎஸ்கேவை பைனலில் எதிர்கொள்ளும் ஒரு போட்டித் தொடர்தான் ஐபிஎல் என்று தோனி சொல்வதைப் போலவும் உள்ளது இந்த மீம். ஆம்.. எத்தனை பிளே-ஆப், எத்தனை பைனல். வேறு எந்த டீமுக்கும் இப்படி ஒரு தனித்துவம் கிடையாதே.

வெளியேறவில்லை.. வெறியேறியது
இதுதான் கம்பேக். போன வருடம் ஐபிஎல்லில் யாருமே எதிர்பார்க்காத வகையில், முதலாவதாக பிளேஆப் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது சிஎஸ்கே. ஆனால் கூடவே, மனதில் வெறியும் ஏறியது. இதோ, இப்போது முதலாவதாக பிளேஆப் செல்லும் அணியாக கம்பேக் கொடுத்துள்ளது சிஎஸ்கே.

என்ன பேரு வேண்டும், எடுத்துக்கோங்க
தல டேக்கன் ஆப்.. சிக்னேச்சர் தோனி பினிஷ்.. ஹெலிகாப்டர் டேக்கன் ஆப்.. மைட்டி மேஹி.. இப்படி என்ன பேர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.. இதுதான் தோனி ஷாட்.. இதுதான் சிக்சர் என்று பெயருக்கு ஆப்ஷன் கொடுக்கிறது இந்த மீம்.

தோனிக்கு எல்லாமே அழகுதான்
தோனி அடித்த சிக்சர் மட்டுமல்ல.. அவரது குடும்பமும் அழகுதான். நேற்றைய போட்டியை பார்க்க வந்த தோனி மனைவி சாக்சி மற்றும், மகள் ஷிவா..

ருத்துராஜை மறந்துட்டீங்களே
தோனியை புகழ்ந்து ரசிகர்கள் ஒரு பக்கம் மீம்ஸ் போட்டால், சிலரோ, அதெப்படி புகழலாம். மற்ற வீரர்களையும் புகழனும். தோனி அடித்த சிக்சை வைத்து பிறரை மறப்பதா என்று இப்படியும் மீம்ஸ் போடுகிறார்கள். அதாவது ருத்துராஜ் இன்னிங்சை ரசிகர்கள் மறந்து தோனியை மட்டும் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்களாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications