எல்லோரும் தோனியாக முடியுமா.. இவருக்கு டைம் கொடுங்க.. இளம் வீரருக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் வீரர்

Subscribe to Oneindia Tamil

துபாய்: எல்லோரும் எம்.எஸ் தோனியாக இருக்க முடியாது. ரிஷப் பண்ட் நல்ல கேப்டன். அவருக்கு டைம் கொடுங்கள் என்று இந்திய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.ஐ.பி.எல் சீசன் 2021 இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது.

நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த 2-வது குவலிபயர் போட்டியில் பலம் வாய்ந்த டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா.

மிரட்டல் பந்துவீச்சு

மிரட்டல் பந்துவீச்சு

கொல்கத்தா கேப்டன் மோர்கன் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அவரின் போட்ட கணக்குப்படியே எல்லாம் நல்லபடியாக நடந்தது. டெல்லியின் ஒப்பனர்கள், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் என யாரும் சோபிக்கவில்லை. பெர்குசன், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் மிரட்டல் பந்துவீச்சில் டெல்லி அணியால் 20 ஓவர்கள் முடிவில் வெறும் 135 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

 முற்றுப்புள்ளி வைத்த ராகுல் திரிபாதி

முற்றுப்புள்ளி வைத்த ராகுல் திரிபாதி

எளிய இலக்கை நோக்கி துரத்திய கொல்கத்தா ஒப்பனர்கள் டெல்லி பவுலர்களை போட்டு புரட்டி எடுத்தனர். ஒரு கட்டத்தில் கொல்கத்தா எளிய வெற்றி பெறும் என்று கருதப்பட்டது. ஆனால் அரை சதம் அடித்த வெங்கடேஷ் அவுட்டானதும் மேட்ச் அப்படியே மாறியது. 11 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா பரிதவித்தது. கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் சிக்ஸர் அடித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ராகுல் திரிபாதி.

ஆஷிஷ் நெஹ்ரா பண்ட்க்கு ஆதரவு

ஆஷிஷ் நெஹ்ரா பண்ட்க்கு ஆதரவு

டெல்லி ஏற்கனவே சென்னைக்கு எதிரான ஆட்டத்திலும் சரி, இந்த ஆட்டத்திலும் சரி கடைசியில் வந்து டெல்லி தோல்வியை சந்தித்ததற்கு கேப்டன் ரிஷப் பண்ட்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அவர் பவுலர்களை சரியாக ரொட்டேட் செய்யாததே தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது. டெல்லி ரசிகர்கள் பலரும் ரிஷப் பண்ட்டை விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா ரிஷப் பண்ட்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    2 Indian Team வீரர்களுக்கு காயம்? T20 World Cup Squad-ல் மாற்றம் வருமா ?
    சந்தேகம் இல்லை

    சந்தேகம் இல்லை

    இது தொடர்பாக ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில், 'அடுத்த சீசனுக்கு டெல்லி கேப்டனாக பந்த் தக்கவைக்கப்பட வேண்டும். அவர் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறாரோ, அவ்வளவு சிறப்பாக அவர் பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் எவ்வளவு விரைவாகக் கற்றுக்கொள்கிறாரோ, அது அவருக்கும் உரிமையாளருக்கும் நல்லது. சில தவறுகளை தவிர அவர் கேப்டனாக நன்றாக இருந்தார்' என்று கூறியுள்ளார்.

    தோனியாக இருக்க முடியாது

    தோனியாக இருக்க முடியாது

    எல்லோரும் எம்.எஸ் தோனியாக இருக்க முடியாது, ரிஷப் பந்த் முன்னேற நேரம் கொடுங்கள். ரிஷப் பண்ட் மிகவும் இளைவராக இருக்கிறார். அடுத்த சீசனில் முன்னேறுவார். அவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துளளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+