சவுதி vs அமீரகம்.. முட்டி மோதும் இரு கச்சா எண்ணெய் ஜாம்பவான்கள்.. உலக வர்த்தகத்திற்கே ஆபத்து!
துபாய்: மத்திய கிழக்குப் பகுதியில் ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த சக்திகளாகக் கருதப்பட்ட சவுதி அரேபியாவும் ஐக்கிய அமீரகமும் இப்போது தீவிர மோதலில் உள்ளன. ஏமன் போர்க்களங்கள் முதல் உலக எரிசக்திச் சந்தைகள் வரை மத்திய கிழக்கு புவிசார் அரசியல் இதனால் தலைகீழாகிறது. இரு தரப்பிற்கும் பிரச்சினை ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மத்தியக் கிழக்கில் இரு முக்கிய நாடுகள் என்றால் அவை சவுதியும், ஐக்கிய அமீரகமும் தான். ஒரு காலத்தில் ஒன்றாகச் செயல்பட்ட இந்த இரு நாடுகளுக்கும் இடையே இப்போது மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பு, ஓபெக் ஒற்றுமை, பிராந்தியப் பாதுகாப்பு என அனைத்தையும் பாதிக்கிறது.

சவுதி vs அமீரகம்
ஒரு காலத்தில் ஈரானுக்கு எதிராக இணைந்து நின்ற இந்த நாடுகளும், இப்போது பிராந்தியச் செல்வாக்கு, பொருளாதார ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் நேர் எதிராக நிற்கிறது.
ஏமன் நாட்டில் ஏற்பட்ட மோதலில் இரு நாடுகளும் தலையிட்டதே இந்தப் பிராந்திய மோதலுக்குப் பிரதானக் காரணமாகும். 2015ல் தொடங்கிய இந்தப் பதற்றம் தொடங்கி, 2018ஆம் ஆண்டில் தீவிரமானது. தனது எல்லைப் பாதுகாப்பிற்காக சவுதி அரசு, ஏமனில் ஹவுதிக்கு எதிரான அரசை ஏமனில் விரும்புகிறது. ஆனால், அமீரகம் தெற்கு பிரிவினைவாதிகளான எஸ்டிசி எனப்படும் Southern Transitional Councilக்கு ஆதரவளித்தது.
காரணம் என்ன
இப்படி இரு நாடுகளும் இரு வேறு பிரிவுக்கு ஆதரவு அளிப்பதே மோதலுக்கு முதல் காரணம். இந்தச் சூழலில் தான் கடந்த டிசம்பர் 2025இல், ஆடென் அருகே அமீரக ஆயுதக் கப்பல் மீது சவுதி ஜெட் விமானங்கள் தாக்கின. இது மோதலைத் தீவிரப்படுத்தியது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஏமனில் யாருக்குக் கட்டுப்பாடு என்பதே மோதலுக்குப் பிரதானக் காரணம்!
அடுத்து பொருளாதார ரீதியாகவும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருக்கிறது. பொருளாதார ரீதியாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030 துபாய்க்கு நேரடிப் போட்டியாக அமைகிறது. சுற்றுலாப் பயணிகள், தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பது, ஃபார்முலா இ, டாவோஸ் கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளை நடத்துவது என சவுதி இதில் மிகப் பெரிய தொகையைச் செலவிட்டு வருகிறது. நியோம் போன்ற பெரிய திட்டங்கள், வரிச் சலுகைகள் மூலம் அமீரக நகரங்களை சவுதி ஓரங்கட்டுகிறது.
கச்சா எண்ணெய் வர்த்தகம்
இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் கச்சா எண்ணெய் வர்த்தகத்தைக் கண்காணிக்கும் ஓபெக்+ அமைப்பிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமீரகம் தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப் பெரும் முதலீடு செய்துள்ள நிலையில், அதைச் சர்வதேச மார்கெட்டிற்கு கொண்டு வந்து லாபம் பார்க்க விரும்புகிறது. ஆனால், உற்பத்தியைக் குறைத்தால் தான் விலையைப் பராமரிக்க முடியும் என்பதால் சவுதி உற்பத்திக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
அதேபோல (ஆபிரகாம் ஒப்பந்தங்களுக்குப் பிறகு இஸ்ரேல் அமீரக உறவு சீரடைந்து வருகிறது. இதுவே மோதலின் உச்சக்கட்டம்.! இதை சவுதி ஏற்கவே முடியாது என்று கருதுகிறது. அதேபோல சூடான் சோமாலியா, அசாத் பிந்தைய சிரியாவில் நடக்கும் நிழல் சண்டைகளும் இரு நாடுகளுக்கும் இடையே அதிகார மோதலாகவே உருவெடுத்துள்ளது..
ஏன் முக்கியம்
கடந்த 2025ல் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் $31 பில்லியனை எட்டிய போதும், விரிசல்கள் தெளிவாகத் தெரிகின்றன. சவுதி நிறுவனங்கள் அமீரகத்தில் விசா தாமதங்கள், ஒழுங்குமுறைத் தடைகளைச் சந்திக்கிறது. அமீரகம் இதை வேண்டும் என்றே செய்வதாக சவுதி குற்றஞ்சாட்டுகிறது.
இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்வது மத்தியக் கிழக்கு பிராந்தியத்திற்கே நல்லது இல்லை. இதன் காரணமாகவே கத்தார் இந்த விவகாரத்தில் அமைதியாக மத்தியஸ்தம் செய்கிறது. பதற்றத்தைக் குறைக்கத் தவறினால், இரு நாடுகளுக்கும் இடையே சிறு விஷயம் கூட மோதலாக மாறும். அது இரு நாடுகளை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.
-
இந்தியாவில் ஊரடங்கு? "அப்படியொரு திட்டம் பரிசீலனையில் கூட இல்லை!" மத்திய அரசு திட்டவட்டம் -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இதுதான் ஜப்பான்.." போருக்கு நடுவே தைரியமாக எடுத்த முடிவு.. உலக நாடுகள் கூட திணறுதே! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு











Click it and Unblock the Notifications