ரபடா ஹாட்ரிக் விக்கெட்.. இங்கிலாந்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா..ஆனாலும் தொடரில் இருந்து வெளியேறியது

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இன்று முக்கியமான போட்டியில் மோதின.

இந்த போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தினால்தான் அரையிறுதித்க்கு செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இந்த முக்கியமான போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

 அதிரடி சிக்ஸர்கள்

அதிரடி சிக்ஸர்கள்

தொடக்கத்தில் பயங்கரமாக தடுமாறிய ரீசா ஹென்ட்ரிக்ஸ் 2 ரன்னில் மொயின் அலி பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென், தொடக்க வீரர் டி காக் சிறப்பாக விளையாடினார்கள். டி காக் 34 ரன்களில் வெளியேற அடுத்து வந்தார் ஏய்டன் மார்க்ரம். ராஸ்ஸி வான் டெர் டுசெனும், ஏய்டன் மார்க்ரமும் இங்கிலாந்தின் மார்க் வுட், கிறிஸ் வோஸ்க்ஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். இருவரும் சர்வசதாராணமாக சிக்ஸர்களை பறக்க விட்டனர்.

189 ரன்கள்

189 ரன்கள்

ராஸ்ஸி வான் டெர் டுசென் 60 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். மறு பக்கம் ருத்ரதாண்டவமாடிய ஏய்டன் மார்க்ரம் வெறும் 25 பந்துகளில் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.

ஜாசன் ராய் காயம்

ஜாசன் ராய் காயம்

இதனை தொடர்ந்து இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்கம் முதலே ஜாசன் ராய், ஜோஸ் பட்லர் அடித்து நொறுக்கினார்கள். 15 ரன்கள் எடுத்திருந்த ஜாசன் ராய் காயம் காரணமாக ரிட்டயர் ஹார்ட் ஆகி வெளியேறினார். அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 26 ரன்களில் அவுட்டானார். அதன்பினர் வந்த போர்ஸ்டோ 1 ரன்னில் ஷாம்சி பந்தில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய மெயின் அலி 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

ஹாட்ரிக் சிக்ஸர்; ஹாட்ரிக் விக்கெட்டுகள்

ஹாட்ரிக் சிக்ஸர்; ஹாட்ரிக் விக்கெட்டுகள்

டேவிட் மலான் 33 ரன்களில் அவுட்டாக இங்கிலாந்து பரிதவித்தது. லிவிங்ஸ்டன், ரபடா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து நம்பிக்கையூட்டினார். ஆனால் பிரிட்டோரியஸ் சிறப்பாக பந்து வீசி லிவிங்ஸ்டனை 28 ரன்னில் வெளியேற்றினார். கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. ரபடா பந்துவீசினார். முதல் பந்தில் வோக்ஸ் 7 ரன்னில் அவுட்டானார். 2-வது பந்தில் மோர்கன் 17 ரன்களில் அவுட்டானார். 3-வது பந்தில் ஜோர்டனையும் டக் அவுட்டில் வெளியேற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார் ரபடா.

10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இறுதியில் இங்கிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் நெட் ரன் ரேட்டில் ஆஸ்திரேலியாவை விட பின் தங்கியதால் தென் ஆப்பிரிக்கா அணி பரிதாபமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதிக நெட் ரன் ரேட் வைத்திருந்த ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தொடரில் இருந்து வெளியேறினாலும் அனைத்து போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியாவுடன் மட்டும் தோற்ற அந்த அணி நெருங்கி வந்துதான் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+